ஆயிரம் முதல் ரூ.10,000 வரை அபராதம்.. ஓட்டுநர்கள் கவனத்திற்கு.. விதிகளை மறக்காதீங்க

Published : Dec 12, 2025, 09:10 AM IST

தமிழகத்தில் 2019 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் புதிய, கடுமையான அபராதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதிக வேகம், மது அருந்திவிட்டு ஓட்டுதல், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாதது போன்ற தவறுகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

PREV
15
போக்குவரத்து அபராதங்கள்

இந்தியாவில் 2019 முதல் அமலாகியுள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டம், தவறான ஓட்டுநர் பழக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான அபராதங்கள் கொண்டு வந்தது. தமிழகமும் இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே, கார், பைக் அல்லது ஏதேனும் வாகனம் ஓட்டுபவர்கள் இந்த விதிகள் குறித்து தெரிந்து வைத்திருத்தல் அவசியம். விதிகள் தெரியாமல் மீறினாலும், e-challan முறையில் நேரடியாக அபராதம் வரும். அதனால், சாலையில் பயணிக்கும் முன் முக்கியமான அபராதங்கள் என்ன என்பதைக் கவனமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

25
ஹெல்மெட் அபராதம்

வேக எல்லையை மீறும் அதிக வேகம் தமிழகத்தில் மிகவும் கண்டிப்பாக கண்காணிக்கப்படுகிறது. கார்கள் மற்றும் சிறிய வாகனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. நகர்ப்புற சாலைகள், ரிங்ரோடுகள், எக்ஸ்பிரஸ்வேக்கள் போன்ற பகுதிகளில் கேமரா கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேக எல்லையை கடைப்பிடிப்பது பாதுகாப்புக்கும் அவசியம் ஆகும்.

35
மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல்

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல் இந்தியா முழுவதும் மிகக் கடுமையாக தண்டிக்கப்படும் குற்றமாகும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அனுமதியை மீறினால் ரூ.10,000 அபராதத்துடன் சிறை தண்டனையும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தினசரி மது பரிசோதனை ரெய்டுகள் நடைபெறும். பெரும்பான்மையானவர்களுக்கு விபத்து காரணமாக மதுவில் ஓட்டுதலே அரசு இதை மிகத்தீவிரமாகக் கண்காணிக்கிறது.

45
சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட்

சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை தவறாமல் அணிய வேண்டும். காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1,000 அபராதமும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறினால் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். இது வெறும் அபராதத்தைக் குறைக்க மட்டுமல்ல, விபத்துக்களில் உயிர் பாதுகாப்புக்கும் மிக அவசியம்.

55
லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுதல்

லைசென்ஸ் இல்லாமல் ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இன்ஷூரன்ஸ் காலாவதியான வாகனத்தை ஓட்டினால் முதல் தவறுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். மூவர் பயணம் ரூ.1,000 அபராதம் மற்றும் லைசென்ஸ் ரத்து ஆபத்து உள்ளது. மொபைலை பயன்படுத்திக் கொண்டு வாகனத்தை ஓட்டினால் ரூ.5,000 அபராதமும், ஆர்சி அல்லது வாகன ஆவணங்கள் இல்லாமல் சென்றால் ரூ.3,000–ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories