நேற்று ஷாக் கொடுத்த தங்கம் விலை.! இன்று குட் நியூஸ் சொன்னதா.?
தங்கத்தின் விலையானது இதுவரை சந்திக்காத புதிய உச்சத்தை நாள்தோறும் தொட்டு வருகிறது. அதன் படி ஒரு சவரன் 62ஆயிரம் ரூபாயை அசால்டாக கடந்துள்ளது. தற்போது முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் அதிகமான மக்கள் தங்கத்தை வாங்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விலை உயர்வானது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தங்க நகைகள் வாங்க ஏற்கனவே ஒதுக்கிய பட்ஜெட்டில் பற்றாக்குறை உருவாகியுள்ளது.
ஏறி இறங்கும் தங்கம் விலை
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் படி அக்டோபர் 31ஆம் தேதி 60ஆயிரம் ரூபாய் நெருக்கத்தில் வந்த தங்கத்தின் விலையானது அடுத்த சில நாட்களில் சுமார் 5ஆயிரம் ரூபாய் அளவிற்கு சரிந்தது.
இதனால் நகைப்பிரியர்கள் இது தான் நல்ல சான்ஸ் என தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தனர். அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலை கடந்த ஜனவரி 22ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது.
10 நாட்களில் 2500 ரூபாய் உயர்வு
கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,500 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை யாரும் எதிர்பாராத அளவில் ஜனவரி 31ஆம் தேதி ஒரு பவுனுக்கு 960 ரூபாய் ஒரேநாளில் அதிரடியாக உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
இதனை சற்றும் எதிர்பாராத மக்களுக்கு நேற்றும் தங்கத்தின் விலை அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று மட்டும் இரண்டு முறை அதிகரித்தது.
இரண்டு முறை அதிகரித்த விலை
அதன் படி காலையில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 7,745 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மாலையில் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்தது. அதன் படி கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 62ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை என்ன.?
இன்று தங்க நகை வியாபார சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தங்கத்தின் விலையானது நேற்று ஒரே நாளில் 360 ரூபாய் உயர்ந்தது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நாளை வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலை சரியுமா.? அல்லது உயருமா என கேள்வி குறியை ஏற்படுத்தியுள்ளது.