பட்ஜெட்டில் பீகார் மட்டுமல்ல, ஆந்திராவுக்கும் அள்ளிக்கொடுத்த மத்திய அரசு; என்னென்ன திட்டங்கள்?
மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக திட்டங்கள் கிடைத்துள்ளன. அதே வேளையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா முற்றிலுமாக புறக்கணிக்கப்படுள்ளன.
மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக திட்டங்கள் கிடைத்துள்ளன. அதே வேளையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா முற்றிலுமாக புறக்கணிக்கப்படுள்ளன.
2025 26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். வருமான வரி சலுகை, விவசாயிகளுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு, விலை குறையும் மின்சார வாகனங்கள் என பட்ஜெட்டில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசு திட்டங்களை அள்ளிக்கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
எதிர்க்கட்சிகள் கூறியதுபோலவே பீகார் மாநிலத்துக்கு ஏராளமான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்நுட்பம் அமைக்கப்படும். தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும். பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பாட்னாவில் புதிதாக கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும்.
பீகாரில் உள்ள மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படும். பாட்னாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என பீகார் மாநிலத்துக்கு திட்டங்களின் மழையை பொழிந்துள்ளது மத்திய அரசு. இதனை வைத்து இது மத்திய பட்ஜெட்டா? இல்லை பீகார் மாநில பட்ஜெட்டா? என எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் கேள்வி கேட்டு வருகின்றன.
பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிலையில், ஆட்சியை காப்பாற்றுவதற்காக பாஜக அரசு திட்டங்களை அள்ளிக்கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. பீகார் மட்டுமல்ல, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திரா மாநிலத்துக்கும் இந்த பட்ஜெட்டில் ஏராளாமான திட்டங்கள் அறிவிக்கபப்ட்டுள்ளன.
மூத்த குடிமக்கள், மிடில் கிளாஸ் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்; இதை கவனிச்சீங்களா..!
அதாவது ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் ரூ.15,000 கோடி நிதி ஆந்திரவுக்ககு ஒதுக்கப்படும் எனவும் வரும் ஆண்டுகளில் கூடுதல் தொகைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் அதன் விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கும் போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடத்தில் உள்ள கோப்பர்த்தி முனையிலும், ஹைதராபாத்-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தில் உள்ள ஓர்வக்கல் முனையிலும் உள்ள நீர், மின்சாரம், ரயில்வே மற்றும் சாலைகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆந்திர பிரதேச பொருளாதார வளர்ச்சிக்கான மூலதன முதலீட்டிற்கு இந்த ஆண்டு கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். மேலும் ராயலசீமா, பிரகாசம் மற்றும் வடக்கு கடலோர ஆந்திராவின் பின்தங்கிய பகுதிகளுக்கும் மானியங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தேசிய ஜனநாயாக கூட்டணியில் இருந்து பாஜக ஆட்சிக்கு ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் 2025 : 12 லட்சம் வரை வரி இல்லை; விவசாயிகள், MSMEகளுக்கு முக்கிய அறிவிப்புகள்!