டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அதன் பெரும்பாலான ஊழியர்களுக்கு 4.5% முதல் 7% வரை சம்பள உயர்வு அறிவித்துள்ளது. சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு 10%க்கும் மேலாக சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) அதன் பெரும்பாலான ஊழியர்களுக்கு 4.5% முதல் 7% வரை சம்பள உயர்வு அறிவித்துள்ளது. இந்தச் சம்பள உயர்வு செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
நிறுவனம் இந்த உயர்வு குறித்த அறிவிப்புக் கடிதங்களை திங்கள்கிழமை மாலை முதல் ஊழியர்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து நிறுவனம் அதிகாரபூர்வமான எந்தத் தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
23
12,000 ஊழியர்களைப் பணி நீக்கம்
கடந்த இரண்டு மாதங்களாக, இந்த நிறுவனம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. சந்தை நிலவரம் சரியாக இல்லாத காரணத்தினால் சம்பள உயர்வை ஒத்திவைப்பதாக முதலில் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, சுமார் 12,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப் போவதாகவும், அதாவது அதன் மொத்த ஊழியர்களில் 2% பேரை நீக்கப் போவதாகவும் அறிவித்தது.
33
10%க்கும் மேலாக சம்பள உயர்வு
சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகளின்படி, பெரும்பாலான ஊழியர்கள் கீழ் மற்றும் மத்திய நிலையில் உள்ளவர்கள்தான் இந்தச் சம்பள உயர்வு பெறத் தகுதியுள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. அதேநேரம், சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு 10%க்கும் மேலாக சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் மாதக் காலாண்டு அறிக்கையின்படி, இந்நிறுவனத்தின் பணியாளர் விலகல் விகிதம் (attrition rate) 13.8% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.