இரு சக்கர வாகனங்களின் ஆயுளை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் சரியான பராமரிப்பு அவசியம். BS-6 வாகனங்களுக்கும் பொருந்தும் சில பொதுவான தவறுகளைத் தவிர்த்து, வண்டியை நீண்ட நாட்கள் நல்ல நிலையில் வைத்திருக்க இந்தக் குறிப்புகள் உதவும்.
இன்றைய தலைமுறையில், இரு சக்கர வாகனம்னா அது வெறும் போக்குவரத்து சாதனமில்லை; நம் வாழ்க்கைத் துணையா மாறிட்டிருக்கு. அதை சரியான முறையில பயன்படுத்துறதும், பராமரிப்பதும் ரொம்ப முக்கியம். இல்லனா வண்டியின் ஆயுளும் குறையும், செலவுகளும் கூடும். பலருக்கும் இன்னும் சில பழைய நம்பிக்கைகள் இருக்கிறது. புதிய BS-6 வாகனங்கள் வந்த பிறகும், BS-4 பைக்குகளைப் போலவே நடத்துறாங்க. அதால்தான் சில தவறுகள் பொதுவாக நடக்குது. அந்த தவறுகளை இப்போ பார்ப்போம்.
27
சீட்டுக்கீழ் பொருள் வைக்காதீங்க
பைக்கின் சீட்டுக்கீழ் area-வில் documents, துணி மாதிரி பொருள்கள் வைப்பது வழக்கமா இருக்கு. ஆனா, பல பைக்குகளில் அங்கே தான் air filter vent இருக்கும். அதைக் மறைக்குறது, காற்றோட்டத்தை குறைக்கும். இதனால் performance, mileage இரண்டும் பாதிக்கப்படும். அதனால சீட்டுக்கீழ் தேவையில்லாத பொருள் வைக்காதீங்க.
37
ஐடிலிங் RPM-ஐ மாற்றாதீங்க
சிலர் பைக்கின் pick-up வேகத்துக்காக idle RPM-ஐ அதிகரிப்பாங்க; சிலர் mileage காக குறைப்பாங்க. இரண்டும் தவறு. அதிக RPM-ல் இன்ஜின் அதிகமாக சுமை வாங்கும், குறைத்தா எண்ணெய் சரியாக சுழற்சி ஆகாது. இரண்டுமே engine-க்கு தீங்கு. கம்பெனி பரிந்துரைக்குற அளவுல இருக்கணும்; அதில்தான் நன்மை.
பைக்கை ஆன் பண்ணினதும் உடனே ஸ்டார்ட் அடிக்காதீங்க. இன்ஜின் சில விநாடிகள் “idle” ல இருக்கணும். குறிப்பாக BS-6 வாகனங்களுக்கு இது ரொம்ப அவசியம். சாவி போட்டதும், RPM மீட்டர் ஒரு முறை ரிட்டர்ன் அடிக்கட்டும்; அதுக்கப்புறம்தான் ஸ்டார்ட் செய்யுங்க. அப்போதுதான் எல்லா சென்சார்களும் செம்மையா வேலை செய்யும், இன்ஜினின் ஆயுளும் நீடிக்கும்.
57
நீண்ட நாட்கள் பைக் ஓடாதா?
பைக்கை சில நாட்கள் ஓடாம வைக்க வேண்டி இருந்தால், side stand-க்கு பதிலா centre stand போட்டா நல்லது. பேட்டரியில leakage கம்மியாகும். பைக் மாதக்கணக்கில் ஓடாம இருந்தா, பழைய petrol-ஐ முழுசா டிரெய்ன் பண்ணி, புதிய petrol நிரப்பினா engine-க்கு நல்லது. பழைய petrol-லிருந்து carbon deposit அதிகரிச்சு engine-ஐ கெடுக்கும் அபாயம் உண்டு.
67
பெட்ரோல் நிரப்பும் நேரத்தைக் கவனியுங்கள்
பங்க்கில் tanker லிருந்து fuel unload பண்ணும் நேரத்துல உங்கள் வண்டிக்கு petrol நிரப்பாதீங்க. அப்போ storage tank-ல இருக்கும் தூசு, குப்பைகள் கலக்க வாய்ப்பு அதிகம். அது உங்கள் பைக்கின் tank-க்குள் போச்சுனா, filter-க்கும், engine-க்கும் பாதிப்பு. அதனால சிறிது நேரம் கழிச்சுதான் petrol நிரப்புங்க.
77
வண்டி நீண்ட ஆயுளும், நல்ல mileage-மும் தரும்
பைக்/ஸ்கூட்டர் வைத்திருப்பது மட்டுமல்ல, அதை நன்றாக பராமரிக்கறதும் equally முக்கியம். இந்த 5 தவறுகளை தவிர்த்தால், உங்க வண்டி நீண்ட ஆயுளும், நல்ல mileage-மும் தரும்.