சொத்து வைத்திருப்பவர்களுக்கு ஷாக் நியூஸ்.! மார்ச் 31 வரை தான் டைம்.! இல்லைனா லட்சக்கணக்கில் இழக்க நேரிடும்.!

Published : Mar 24, 2026, 12:58 PM IST

Tamil Nadu land registration charges from April 1 2026 : ஏப்ரல் 1, 2026 முதல் பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 1க்கு பிறகு வரவுள்ள மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் சொத்துக்களை வாங்க அல்லது விற்க காத்திருப்பவர்கள் மார்ச் மாத இறுதியில் இக்கட்டான சூழலை சந்திக்க இருக்கின்றனர். ஏப்ரல் 1, 2026 முதல் பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, முத்திரை தீர்வை போன்றவற்றில் திருத்தங்கள் வர இருப்பதால் சொத்து வாங்க அல்லது விற்க இருப்பவர்கள் தங்கள் கையில் இருந்து லட்சக்கணக்கான தொகையை இழக்க வேண்டி இருக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

25
ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள விதிகள்

கடந்த சில வருடங்களாக மாற்றப்படாமல் இருந்த சில பகுதிகளை மாற்ற அரசு ஆலோசித்து வருகிறது. சில ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த சில பகுதிகளின் வழிகாட்டி மதிப்பை நடப்பு சந்தை விலைக்கு நிகராக உயர்த்துவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் பத்திரப்பதிவை முடிப்பவர்களுக்கு பழைய கட்டணமே பொருந்தும். ஆனால் ஏப்ரல் 1, 2026 ஆம் தேதிக்குப் பின்னர் பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை தீர்வை செலுத்த வேண்டி இருக்கும்.

35
நடுத்தர குடும்பங்களுக்கு கூடுதல் சுமை

அரசின் இந்த மாற்றம் பெரிய அளவில் சொத்து வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இது பெரிய சுமையை ஏற்படுத்தலாம். எனவே அரசின் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு பத்திரப்பதிவு செய்பவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் பத்திரப்பதிவை முடிப்பது லாபகரமானது. மார்ச் 31க்குள் முடிக்கப்படும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தித் தரும். எனவே அடுத்த ஏழு நாட்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

45
பட்டா மாறுதல்

டோக்கன் முன்பதிவு செய்தவர்கள் இந்த மாத இறுதிக்குள் பத்திரப்பதிவை செய்து கொள்வது சிறந்தது. பட்டா மாறுதல் தொடர்பான நடைமுறைகளும் ஏப்ரல் மாதம் முதல் எளிமையாக்கப்பட இருக்கின்றன. பத்திர பதிவு செய்த உடனேயே தானியங்கி முறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சிக்கல் நிலவுகிறது. பழைய வில்லங்கச் சான்றிதழில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த தானியங்கி முறை செயல்படாது. சரியான முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யாதவர்கள் சட்ட சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம்.

55
அங்கீகாரம் இல்லாத மனைகள்

அதேபோல் அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் வரைமுறைப்படுத்தப்படாத இடங்களை விற்பனை செய்வதில் கூடுதல் கட்டுப்பாடுகள் வரவுள்ளது. எனவே சொத்துக்களை வாங்குபவர்கள் குறைந்த விலை என்று ஆசைப்படாமல் அந்த இடத்திற்கு முறையான அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வாங்குவது நல்லது. ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருப்பவர்கள் மற்றும் புதிதாக இடம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டு இருப்பவர்கள் மார்ச் இறுதிக்குள் பத்திரப்பதிவை முடிப்பதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories