கோயம்புத்தூரைச் சேர்ந்த சுந்தர் என்ற பயனர் தனது ஆன்லைன் ஆர்டர் ஸ்கிரீன் ஷாட்டையும், நேரடியாக உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டதற்கான பில்லையும் ஒப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். ஸ்விக்கி, சொமாட்டோவில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலைக்கு விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
அவர் ஸ்விக்கி மூலம் பரோட்டா, சிக்கன் 65, சிக்கன் லாலிபாப்ஸ், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தார். மொத்த பில் 1473 ரூபாய். அதே உணவை நேரடியாக உணவகத்தில் வாங்கினார். 810 ரூபாய் மட்டுமே செலுத்தினார். அதாவது, ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் மூலம் இரண்டு மடங்கு விலை செலுத்த வேண்டியுள்ளது.