PM Kisan: 10 கோடி விவசாயிகளுக்கு ஜாக்பாட்! அக்கவுண்டில் ரூ.2,000 ஏறும்! மத்திய அரசின் பரிசு!

Published : Feb 24, 2025, 09:52 AM IST

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இன்று ரூ.23,000 கோடி நிதி விடுவிக்கப்படுகிறது. இதன்மூலம் 10 கோடி விவசாயிகளுக்கு அவர்களின் அக்கவுண்டில் தலா ரூ.2,0000 வரவு வைக்கப்படும். 

PREV
14
PM Kisan: 10 கோடி விவசாயிகளுக்கு ஜாக்பாட்! அக்கவுண்டில் ரூ.2,000 ஏறும்! மத்திய அரசின் பரிசு!
10 கோடி விவசாயிகளுக்கு ஜாக்பாட்! அக்கவுண்டில் ரூ.2,000 ஏறும்! மத்திய அரசின் 'மெகா' பரிசு!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2029ம் ஆண்டு முதல் பிஎம் கிஸான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரையிலான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்படும். 4 மாதங்களுக்கு ஒருமுறை இந்த நிதி விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு இந்த தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

24
விவசாயிகளுக்கு நிதியுதவி

நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தால் பயனடைந்து வரும் நிலையில், இன்று 19 வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க இருக்கிறார். பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் 18வது தவணை நிதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டு ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிவுக்கு யார் காரணம்?

34
பிஎம் கிஸான் திட்டம்

இதனால் பிஎம் கிஸான் திட்டத்தின் 19வது தவணை நிதி எப்போது கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில், பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, விவசாயிகளுக்கான  பிஎம் கிஸான் திட்டத்தின் நிதியை விடுவிக்கவுள்ளார். மொத்தமாக 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

44
மத்திய அரசு திட்டம்

ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.2000 நேரடியாக ஏறி விடும். இந்த நிதி உதவியை வழக்கமாக பெற்று வரும் விவசாயிகள் இன்று தங்கள் வங்கிக் கணக்கை செக் செய்து கொள்ளவும். மேலும் பிஎம் கிஸான் திட்டத்துடன் தங்கள் வங்கிக் கணக்கை லிங்க் செய்துள்ள விவசாயிகள் வங்கிக் கணக்கில் கே.ஒய்.சி விவரங்களை முடித்திருப்பது அவசியமாகும். அப்படி கே.ஒய்.சி முடிக்கவில்லை என்றால் PM கிசான் யோஜனா செயலியின் மூலம் இ கே.ஒய்.சி விவரங்களை சப்மிட் செய்து கொள்ளலாம்.

தங்கப் பத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு! முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories