நாட்டின் நன்மைக்காக வரிகளைக் குறைக்க வேண்டும்: நிதி ஆயோக் சி.இ.ஓ வலியுறுத்தல்

Published : Feb 23, 2025, 04:39 PM IST

Niti Aayog CEO BVR Subrahmanyam on Tariff cut: நிதி ஆயோக் சி.இ.ஓ பி.வி.ஆர். சுப்பிரமணியம், இந்தியாவின் நலனுக்காக வரிகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். வளர்ந்த நாடாக மாற, உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்களில் இணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

PREV
16
நாட்டின் நன்மைக்காக வரிகளைக் குறைக்க வேண்டும்: நிதி ஆயோக் சி.இ.ஓ வலியுறுத்தல்
BVR Subrahmanyam on Tariff cut

வரி விதிப்பு எந்த நாட்டையும் பாதுகாக்காது, இந்தியா தனது சொந்த நலனுக்காக வரிகளைக் குறைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

26
India needs to cut tariffs

வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்வில் பேசிய பி.வி.ஆர். சுப்பிரமணியம், யார் சொன்னாலும் சரி, நாட்டின் நன்மைகளைக் கருதி வரி விகிதங்களைக் குறைக்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

36
Niti Aayog CEO BVR Subrahmanyam

வளர்ந்த நாடாக மாற விரும்பினால், உலகின் எல்லா வாய்ப்புகளுக்கும் தயாராக இருப்பது இந்தியாவின் முதல் ஐந்து முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் சுப்பிரமணியம் கூறினார்.

46
Agreements with major economies

வரிகளைக் குறைக்க இந்தியா ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து உள்ளிட்ட பிற முக்கிய பொருளாதாரம் கொண்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் இணைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

56
Global supply chains

உலக விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவை ஒரு பகுதியாக மாற்றுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசு மட்டங்களில் கட்டுப்பாடுகளை நீக்குவது மிக முக்கியம் என்றும் சுப்பிரமணியம் எடுத்துரைத்தார்.

66
Interest in India

உலகில் அனைவருக்கும் இந்தியா மீது ஆர்வம் உள்ளது, இருந்தாலும் இப்போது மக்கள் மற்ற நாடுகளுக்குச் சென்று பார்க்கிறார்கள் எனவும் நிதி ஆயோக் சி.இ.ஓ. கூறினார்.

click me!

Recommended Stories