Rectification Deed Procedure in Tamil Nadu : சொத்து பத்திரத்தில் உள்ள பிழைகளை சரி செய்ய முடியுமா என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கும். பத்திரத்தில் உள்ள பிழையின் தன்மைகள் மற்றும் அதை சரி செய்யும் முறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சொத்து தொடர்பான பத்திரங்களில் பிழைகள் இருந்தால் அதை தாமாக மாற்ற முயற்சி செய்ய கூடாது. அது சட்டவிரோதமாகும். பத்திரத்தில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு சில வழிமுறைகள் உண்டு. பிழையின் தன்மையைப் பொறுத்து, அந்த முறைகளும் மாறுபடும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
25
எழுத்துப்பிழை
பத்திரத்தில் உள்ள பிழைகள் எந்த வகையைச் சார்ந்தது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தட்டச்சு செய்யும் பொழுது கவனக்குறைவால் ஏற்படும் பிழைகள் சொத்தின் உரிமையை நேரடியாக பாதிக்காது. பெயரில் உள்ள எழுத்து மாறுதல், கதவு எண்ணின் இலக்கம் மாறுதல், தந்தை பெயரில் உள்ள பிழைகள், தமிழ் ஆங்கிலம் பெயர்ப்பில் உள்ள உச்சரிப்பு மாற்றங்கள் ஆகியவை உதாரணங்களாகும். முந்தைய ஆவணங்கள் (Parent Document) மற்றும் அடையாள அட்டைகளில் (Aadhar/PAN) விவரங்கள் சரியாக இருந்து பத்திரத்தில் மட்டும் தவறாக இருந்தால் அது எழுத்துப்பிழையாகும்.
35
எழுத்துப்பிழையை எப்படி திருத்துவது?
பத்திரத்தில் எழுத்துப்பிழை இருந்தால் பிழை திருத்தல் பத்திரத்தை உபயோகிக்கலாம். மூலப் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர் வாங்கியவர் இருவருமே சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். சிறிய திருத்தம் என்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மிகவும் குறைவாகவே இருக்கும். இது மாநில விதிகளை பொறுத்து மாறுபடலாம். நிலத்தின் தன்மை அல்லது உரிமையாளரை முழுமையாக மாற்ற இது பயன்படாது.
சொத்தின் அடிப்படை விவரங்களை மாற்றக்கூடிய தீவிரமான பிழை உரிமை அல்லது அளவு சார்ந்த பிழை என்று அழைக்கப்படுகிறது. சர்வே எண் தவறாக இருப்பது, சர்வே எண் மாறுவது, நிலத்தின் அளவு கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பது அல்லது உரிமையாளர் பெயரை முற்றிலும் வேறு ஒருவராக இருப்பது ஆகியவை உரிமை சார்ந்த பிழைகளாகும். பட்டா அல்லது வில்லங்கச் சான்றிதழுடன் ஒப்பிடும் பொழுது தகவல்கள் முரண்பட்டால் அது உரிமை சார்ந்த பிழை என்று அழைக்கப்படும்.
55
உரிமைப் பிழையை திருத்தும் முறைகள்
பரப்பளவு கூடுதலாக இருந்தால் கூடுதல் நிலத்திற்குரிய தற்போதைய சந்தை மதிப்பின்படி முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி திருத்தல் பத்திரம் செய்ய வேண்டும். விற்பனையாளரின் உரிமையில் சந்தேகம் இருந்தால் அந்த நபர் உறுதிப்படுத்தல் பத்திரம் எழுதி தர வேண்டும். பட்டாவில் பிழை இருந்தால் வட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து பரப்பளவை திருத்தலாம். விற்பனையாளர் ஒத்துழைக்கவில்லை என்றாலோ சொத்தின் உரிமைகள் சிக்கல் இருந்தாலோ சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.