Published : Aug 07, 2025, 04:19 PM ISTUpdated : Aug 07, 2025, 04:20 PM IST
ரயில்வே நிலைக்குழு, கோவிட்-19 காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் தள்ளுபடியை மீண்டும் வழங்க பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக, ஸ்லீப்பர் மற்றும் AC 3-Tier வகுப்புகளுக்கு இந்த சலுகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவிட் 19 காலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் ரயில் தள்ளுபடிகளை மீண்டும் வழங்க வேண்டும் என, ரயில்வே நிலைக்குழு சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் AC 3‑Tier பயணங்களுக்கு இந்த தள்ளுபடியை முதலில் மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
25
ரயில் கட்டண தள்ளுபடி
இந்த பரிந்துரை குறித்து, ரயில்வே அமைச்சரும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இதுகுறித்து பேசியுள்ளார். அதில், மூத்த குடிமக்களுக்கான தள்ளுபடிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான குழுவின் பரிந்துரையை பரிசீலிக்க வேண்டுமா என்பது நடுவில் உள்ளது என்று கூறினார்.
35
மூத்த குடிமக்களுக்கு சலுகை
இந்தத் தள்ளுபடிகள் மீண்டும் வழங்கப்படுதலால், மூத்த குடிமக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுக்கும். இதன் மூலம் அவர்கள் குறைந்த விலையில் பல்வேறு இடங்கள், மருத்துவர்களை பார்ப்பது, புனித வழிபாடுகளுக்கு செல்வது போன்றவை இனி நல்ல வசதியாக மாறும்.
2023‑24 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ரயில்வே வழங்கிய சராசரி 45% ரயில் டிக்கெட் மானியம், ரூ.60,466 கோடியாக இருந்தது. மற்ற பிரிவுகள், மாணவர்கள், நோயாளிகள், சிறப்புத் தேவையுள்ளவர்கள் என பலருக்கு தள்ளுபடிகள் இன்றும் வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கும் இதே வகையிலான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போதய விவகாரத்தின் மையமாகும்.
55
இந்தியன் ரயில்வே
இந்த பரிந்துரை ஆனது நிறைவேறும் பட்சத்தில் மூத்த குடிமக்கள் குறைந்த கட்டணத்தில் ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம். இது கோடிக்கணக்கான வயதானவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை தருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை அல்லது அப்டேட்டை மத்திய அரசு வழங்கும் என்றும் எதிர்பார்க்கலாம். தற்போது வரை எந்த வித உறுதியான செய்தியும் வரவில்லை.