மெடிக்கல் ஷாப் தொடங்குனா இவ்ளோ லாபமா.!? இந்த தகுதி மட்டும் இருந்தா போதும்.! மதாம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்.!

Published : Aug 07, 2025, 02:17 PM ISTUpdated : Aug 07, 2025, 02:20 PM IST

நோய்கள் அதிகரிப்பால் மருந்துகளுக்கான தேவை அதிகரித்து, மருந்தகம் இன்று மிகவும் தேவையான தொழிலாக மாறியுள்ளது. D.Pharm, B.Pharm, M.Pharm படித்தவர்கள் அல்லது அவர்களை பணியமர்த்தி மருந்தகம் தொடங்கலாம்.

PREV
13
மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதிக்கலாம்.!

நவீன வாழ்க்கை முறையில் நோய்கள் அதிகரித்து வருவதால், மருந்துகளுக்கான தேவை நாளுக்கு நாள் உயரும் நிலையில் உள்ளது. தினசரி மருந்துகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை பலருக்குள் உள்ளது. எனவே, மருந்தகம் என்பது இன்று மிகவும் தேவையானதும், நிலையான வருமானம் தரும் தொழிலாக மாறியுள்ளது. சிறிய நகரம், கிராமம், மாபெரும் நகரம் என எந்த இடத்திலும் மருந்தகம் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது மிகச்சிறந்த சுயதொழில் வாய்ப்பு இது என்றே கூறலாம்.

மருந்தகம் தொடங்க என்ன படிக்க வேண்டும்?

மருந்தகம் தொடங்க, உங்களுக்கு கீழ்காணும் படிப்புகளில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:

D.Pharm – டிப்ளமோ இன் பார்மசி

B.Pharm – பச்சலர் ஆஃப் பார்மசி

M.Pharm – மாஸ்டர் ஆஃப் பார்மசி

இந்த பட்டங்களை இந்திய மருந்தியல் கவுன்சிலால் (PCI) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் டூவில் Physics, Chemistry, Biology/Maths ஆகிய பாடங்களை படித்த மாணவர்களுக்கு இப்பாடப்பிரிவுகளில் சேர வாய்ப்பு உண்டு.

பட்டம் இல்லாமல் மருந்தகம் தொடங்க விருப்பமா?

அப்படியானால், D.Pharm/B.Pharm பட்டதாரியை நிரந்தரமாக பணியமர்த்தி, அவருடைய பெயரில் உரிமம் பெறலாம். அவரை கடையில் ஃபுல் டைம் வைத்திருக்கவேண்டும் என்பதும் கட்டாயம்.

ஒரு உரிமத்தில் எத்தனை மருந்தகங்கள்?

தகவலறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது:

ஒரு உரிமத்துக்கு, ஒரு கடை மட்டுமே நடத்த அனுமதி உள்ளது.

ஒரே உரிமத்தில் பல மருந்தகங்கள் நடத்துவது சட்டவிரோதம். இது கண்டறியப்பட்டால், மருந்தக உரிமம் ரத்து செய்யப்படும், அபராதமும் விதிக்கப்படும்.

23
மருந்தகம் தொடங்குவதற்கான பதிவு செய்யும் முறை

மருந்தகத்தை தொடங்க, கீழ்கண்ட நான்கு முக்கிய பதிவுகள் அவசியம்

கடை பதிவு (Shop Establishment License)

வணிக பதிவு (Trade License)

GST பதிவு

மருந்து உரிமம் (Pharmacy License)

மருந்து உரிமம் பெறுவது எப்படி?

மாநில மருந்து வாரியத்தில் (State Pharmacy Council) உங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (Drugs Control Department) மூலம் உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடை உங்கள் சொத்தானால் உரிய ஆவணங்கள், வாடகைக்கு எடுத்திருந்தால் லீஸ் ஏக்ரிமென்ட் தேவைப்படும்.

விண்ணப்பிக்க ஒருமாதத்துக்குள் உரிமம் கிடைக்கும்.

மருந்தகம் தொடங்க முதலீடு எவ்வளவு?

மருந்தகத்தைத் தொடங்க தேவையான முதலீடு கீழ்கண்டபடி:

செலவுகள் மதிப்பீடு (ரூபாய்களில்)

கடை வாடகை (மாதத்திற்கு) ₹10,000 – ₹25,000

உபகரணங்கள் (சேல்வ், ஃப்ரிட்ஜ்) ₹40,000 – ₹75,000

மருந்துப் பங்கு (ஸ்டாக்) ₹1,50,000 – ₹3,00,000

உரிமம் மற்றும் பதிவு கட்டணம் ₹15,000 – ₹25,000

பிற செலவுகள் (லொகோ, பேனர்ஸ்) ₹10,000 – ₹15,000

மொத்தம் ₹2.5 லட்சம் – ₹4.5 லட்சம்

33
மருந்தகம் தொடங்குவதால் கிடைக்கும் லாபம்

ஆரம்பத்தில் சில்லறை மருந்தக உரிமத்துடன், குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். பின்னர் விரிவுபடுத்தலாம். நிலையான வருமானம்: மருந்துகள், சுகாதாரப் பொருட்களுக்கு எப்போதும் தேவை உள்ளதால், இதுவொரு நிதானமான தொழில். வழக்கமான விற்பனை: தினமும் நோயாளிகள் மருந்து தேவைப்படும் நிலையிலுள்ள பகுதிகளில் வருவாய் உறுதி. 

குறைந்த அபாயம்: உணவு வணிகம் போன்றவற்றைப் போல வீணாகும் பொருட்கள் இல்லை. மருந்துகள் சுருக்கமான குளிர்பதனத்தில் நன்கு பாதுகாக்கலாம்.

மருத்துவ பக்கத்தில் மதிப்பு: சமூகத்தில் மருந்தகம் வைத்திருப்பவர்களுக்கு மதிப்பு அதிகம்.

அதிக லாப சதவிகிதம்: சில மருந்துகள் 15% - 40% வரை லாபம் தரும். ஆதாவது மாதம்  ரூ. 1 லட்சம் வருமானம் ஈட்டலாம்.

மருந்தகம் என்பது இன்று இளைஞர்கள், பெண்கள், மருத்துவத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தொழில் வாய்ப்பு. இது சமூக சேவையையும் நிறைவேற்றும் தொழிலாகும். தேவையான கல்வித் தகுதி, உரிமம், முதலீடு ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்டு, சரியான இடத்தில் கடையைத் தொடங்கினால், குறுகிய காலத்தில் நிச்சயமாக வெற்றி பெறலாம்!

Read more Photos on
click me!

Recommended Stories