அதிக லாபம் தரும் முதலீடு
தபால் அலுவலகம் பல சிறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது. ஒரு முதலீட்டாளர் நிலையான வருமான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் ஒரு சிறந்த வழி.
5 ஆண்டு முதலீடு
இது வங்கியின் நிலையான வைப்புத்தொகை போன்றது. இருப்பினும், நான்கு வெவ்வேறு காலங்களுக்கு மட்டுமே பணத்தை இதில் டெபாசிட் செய்ய முடியும். தபால் நிலையத்தின் இந்தத் திட்டத்தில் 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு, செலுத்தப்படுகிறது.
7.5 சதவீதம் வட்டி
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, 1 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு 6.9 சதவீதமும், 3 ஆண்டுகளுக்கு 7 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமும் வட்டி கிடைக்கும். குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யவேண்டும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
வட்டி மட்டும் ரூ.2.25 லட்சம்
வருமானவரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் 5 வருட கால டெபாசிட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், அவருக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 974 வட்டி கிடைக்கும். CAGR எனப்படும் ஆண்டு சராசரி வருமானம் 7.71 சதவீதம். ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு, அசல் தொகையான ரூ. 5 லட்சத்தையும் திரும்பப் பெறுலாம்.
ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
இத்திட்டத்தில் வழங்கப்பட்டும் வட்டி விகிதம் வங்கிகளின் சராசரி வட்டிவிகித்த்தை விட அதிகம். அதிகபட்ட முதலீட்டு வரம்பும் இல்லை. இத்திட்டத்தில் செய்த முதலீட்டை முதிர்ச்சிக்கு முன்பே எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு.