ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் 140 டாலர் வரை உயர்ந்த கச்சா எண்ணெய் விலை ஆட்சியை நிறைவடையும் போது 113 டாலராக இருந்தது. 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதியேற்ற பிறகு கடுமையாக சரியத் தொடங்கிய கச்சா எண்ணெய் விலை 2017ம் ஆண்டில் மீண்டும் உயரத் தொடங்கியது.
இது சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு ஏற்க பெட்ரோல், டீசல் விலை அமைய வழிவகுக்கும் என கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தை தவிர விலை குறையவில்லை. கொரோனா காலத்தில் மத்திய பாஜக அரசால் பெட்ரோல் டீசல் மீதான வரிகளும் கடுமையாக உயர்த்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் முதல் கடுமையான கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரியத் தொடங்கியது. 2022 ஜூன் மாதம் 116 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து 2023 ஜூன் மாதம் 70 டாலராக சரிந்தது. அதன் பிறகு சற்றே உயர்ந்த நிலையில் மீண்டும் தற்போது 70 டாலராக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை எண்ணெய் நிறுவனங்களே அனுபவித்து வந்தன. விலை குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். தேர்தல் காலங்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது சீன பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எண்ணெய் நுகர்வோர் குறைந்துள்ளது ஆகிய காரணங்களால் 14 மாதங்களுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் 70 டாலராக குறைந்துள்ளது.
மன்மோகன் சிங் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு 72 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது கச்சா என விலை 70 டாலராக உள்ளபோது பெட்ரோல் விலை ரூ.100. 75 காசுகளாகவே உள்ளது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்த போதும் 173 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.
இந்த சூழ்நிலையில் சர்வதேச கச்சா எண்ணை வெளி கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விரைவில் ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விலை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 174 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.