பல லட்சம் மிச்சம் பண்ணலாம்.. வீட்டுக் கடன் வாங்குபவரா நீங்கள்.. இதை நோட் பண்ணுங்க பாஸ்!

First Published Sep 7, 2024, 10:58 AM IST

வீட்டுக் கடன் வாங்கும்போது, மிதக்கும் வட்டி விகிதம் (Floating Rate) குறைந்த வட்டியை வழங்கும். நிலையான வட்டி விகிதத்தை விட மிதக்கும் வட்டி விகிதம் 1-2% குறைவாக இருக்கும். வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்த்தால் மிதக்கும் வட்டி விகிதம் சிறந்தது.

Home Loan Borrowers

அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தேவைகள் காரணமாக கடன் வாங்குவது இன்று மிகவும் சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக வீடு கட்டும் போது கடன் வாங்குவது என்பது அனைவரின் நீண்ட நாள் ஆசை. ஆனால் இந்தக் கடன் வாங்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், நிறைய பணத்தை மிச்சப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Home Loan

ஃப்ளோட்டிங் ரேட் அதாவது ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​குறிப்பாக வீட்டுக் கடனைப் பெறும்போது பல நன்மைகள் உள்ளது. வீட்டுக் கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதத்துடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டி விகிதத்தை செலுத்துவார்கள். இந்த விகிதம் பெஞ்ச்மார்க் விகிதத்துடன் தொடர்புடைய இயக்கத்தைப் பொறுத்தது. பேஸ் ரேட் என்பது வங்கிகளால் விதிக்கப்படும் பெஞ்ச்மார்க் விகிதமாகும்.

Latest Videos


Home Loan Tips

வங்கிகள் இந்த விகிதத்துக்குக் கீழே கடன் வழங்குவதில்லை. ஆனால் அடிப்படை விகிதம் திருத்தப்படும் போது மிதக்கும் விகிதமும் மாறுபடும். சில நேரங்களில் நிலையான வட்டி விகிதத்துடன் ஒப்பிடும்போது மிதக்கும் விகிதம் சற்று அதிகமாக இருக்கலாம். வருங்காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் நினைத்தால், மிதக்கும் வட்டி அதாவது ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Home Loan Interest Rate

ஆனால் நிலையான வட்டி விகிதங்களுடன் ஒப்பிடும்போது ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்கள் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை குறைவாக இருக்கும். மிதக்கும் வட்டி விகிதத்துடன் கடன் வாங்குவதால் இஎம்ஐகள் அடிக்கடி மாறுபடும். எனவே, கடன் வாங்குவதற்கு முன், மிதக்கும் வட்டி விகிதம் மற்றும் நிலையான வட்டி விகிதத்தை எடைபோட வேண்டுமா, எது சிறந்தது? நிபுணர்களை கலந்தாலோசித்து கடன் பெறுவது நல்லது.

Home Loan Floating Interest Rates

வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தால், ஃப்ளோட்டிங் வட்டி  விகிதங்களும் குறையும். பெரும்பாலான வங்கிகள் ஃப்ளோட்டிங் ரேட் வீட்டுக் கடன்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் அபராதத்தை வசூலிப்பதில்லை. எனவே, வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த நினைப்பவர்கள் மிதக்கும் வட்டி விகிதத்துடன் கடனைப் பெறுவது நல்லது.

3% அதிகரிப்பு எப்போ தெரியுமா? பறந்து வந்த 7வது சம்பள கமிஷன் அப்டேட்.. செக் பண்ணுங்க!

click me!