இந்தத் திட்டத்தில் மாதம் 10,000 மட்டும் முதலீடு செய்தால் நீங்களும் கோடிஸ்வரர் தான்!

Published : Sep 21, 2024, 03:34 PM ISTUpdated : Sep 21, 2024, 03:38 PM IST

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியக் கணக்கு மூலம் சேமித்தால், நீண்ட கால கூட்டுவிகிதத்தின் பலனைப் பெறமுடியும். அதற்கு NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் எப்படி அதிக லாபம் ஈட்டலாம் என்பதைப் பார்க்கலாம்.

PREV
18
இந்தத் திட்டத்தில் மாதம் 10,000 மட்டும் முதலீடு செய்தால் நீங்களும் கோடிஸ்வரர் தான்!
NPS Vatsalya Scheme

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 2024 பட்ஜெட்டின்போது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் NPS இன் கீழ் வரும் குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது NPS வாத்சல்யா யோஜனா என்று அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 18 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. என்பிஎஸ் வதாசல்யா திட்டத்தின் கீழ், 18 வயதுக்குட்பட்ட எந்த மைனர்களும் இதில் முதலீடு செய்யலாம்.

28
What is NPS Vatsalya Yojana?

NPS வாத்சல்யா யோஜனா (NPS Vatsalya Yojana) என்றால் என்ன? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியக் கணக்கு மூலம் சேமிக்க உதவும் திட்டம்தான் இது. இதில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து கூட்டுவட்டியின் பலனை அடையலாம். NPS வாத்சல்யாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால், அதிகபட்ச வரம்பு இல்லை.

38
NPS Vatsalya Rules

பான் மற்றும் ஆதார் அட்டை உள்ள 18 வயதுக்குட்பட்ட மைனர் எவரும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 1000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.

48
NPS Vatsalya Yields

எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் பெயரில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். குழந்தைக்கு 18 வயதாகும்போது, ​​இந்தக் கணக்கு நிலையான NPS கணக்கிற்கு மாற்றப்படும். லாக்-இன் காலம் 3 ஆண்டுகள் முடிந்த பிறகு, நீங்கள் 25% தொகையை 3 முறை திரும்பப் பெறலாம்.

58
NPS Vatsalya Calculation

2.5 லட்சத்துக்கும் மேலான தொகையில், 80% தொகையை எடுக்கலாம். மொத்தத் தொகையில் 20% தொகையை ஒரே முறையில் எடுக்கலாம். 2.5 லட்சம் வரை முழுத் தொகையையும் எடுக்கலாம். இறந்தவுடன், முழுத் தொகையும் பாதுகாவலரின் பெயருக்கு மாற்றப்படும்.

68
NPS Vatsalya Account

உதாரணமாக, NPS வாத்சல்யா யோஜனாவின் கீழ், ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயை 18 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்வதாக வைத்துக்கொள்ளலாம். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த முதலீடு 5 லட்சம் ரூபாய். இதில் ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம் லாபம் சேரும்.

78
NPS Vatsalya Yojana Interest Rate

இந்தத் தொகையை 60 ஆண்டுகள் வைத்திருந்தால், 10% ஆண்டு வருமானத்தைச் சேர்த்து, மொத்த கார்ப்பஸ் ரூ.2.75 கோடியாக இருக்கும். 11.59% ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், 60 வயதிற்குள், இந்த கார்பஸ் ரூ.5.97 கோடியாக இருக்கும். அதேபோல், 12.86% ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், 60 வயதில் மொத்த கார்பஸ் ரூ.11.05 கோடியாக இருக்கும்.

88
NPS Vatsalya Scheme Documents

என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறக்கத் தேவையான ஆவணங்கள்: 18 வயதுக்குட்பட்ட மைனரின் பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் / மெட்ரிகுலேஷன் சான்றிதழ், பான் மற்றும் பாஸ்போர்ட்) இருக்க வேண்டும். இது தவிர, பாதுகாவலரிடம் KYC அடையாளம் மற்றும் முகவரிச் சான்று (ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் திட்ட அடையாள அட்டை மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு) இருக்க வேண்டும். என்ஆர்ஐ என்றால் என்ஆர்இ/என்ஆர்ஓ வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

click me!

Recommended Stories