பெண் குழந்தையின் திருமண வயதில் ரூ.50 லட்சம்... பெற்றோர் முதலீடு செய்வது எப்படி?

First Published | Sep 21, 2024, 10:53 AM IST

குழந்தைகளின் கல்விச் செலவும் மிகவும் உயர்ந்துவிட்டது. இதற்கு பணம் சேமிக்க வேண்டியது பெற்றோரின் முக்கியக் கடமையாகும். குழந்தைகள் வயதுவந்தவுடன், திருமணம் உள்ளிட்ட பிற தேவைகளையும் கருத்தில் கொண்டு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Best Schemes for Girl Children

அதிகரித்து வரும் பணவீக்கத்தால் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் பிரச்னைகள் வராமல் இருக்க, இப்போதிருந்தே சரியான திட்டத்துடன் முதலீடு செய்ய வேண்டும். பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது அவசியம்.

Saving for children's future

குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதோ, அதே போன்று அவர்களின் எதிர்காலத்திற்கான சேமிப்புக்கும் ஒரு திட்டம் இருக்க வேண்டும். குழந்தைகள் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க, பெற்றோர் பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இதற்கு SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம் உதவும்.

Tap to resize

Education Expenditure

இன்று குழந்தைகளின் கல்விச் செலவும் மிகவும் உயர்ந்துவிட்டது. இதற்கு பணம் சேமிக்க வேண்டியது பெற்றோரின் முக்கியக் கடமையாகும். குழந்தைகள் வயதுவந்தவுடன், திருமணம் உள்ளிட்ட பிற தேவைகளையும் கருத்தில் கொண்டு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Investing for Girl Child

குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு கல்வி மிகவும் முக்கியமானது. அதற்கு பணமும் முக்கியத் தேவை. அதனால்தான் குழந்தைகளின் கல்வித் திட்டங்களுக்கு நல்ல சேமிப்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சந்தை ஆபத்து இல்லாத சேமிப்பு அவசியம். இதற்கான சில திட்டங்களைப் பார்ப்போம்.

Sukanya Samriddhi Yojana

சுகன்யா சம்ரித்தி யோஜனா: பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு அதிக லாபம் கொடுப்பது செல்வ மகள் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா. நல்ல வட்டியுடன் வரிச்சலுகையும் கிடைக்கும். பெண்ணுக்குத் திருமணம் ஆகும் நேரத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் துணை நிற்கும். தபால் அலுவலகத்திலோ வங்கியிலோ இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்து கணக்கை ஆரம்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம். உதாரணமாக, மாதம் சுமார் ரூ.8 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 8.2 சதவீத வட்டியுடன் முதிர்வுத் தொகையாக ரூ. 46.65 லட்சம் கிடைக்கும்.

Mutual Funds

மியூச்சுவல் ஃபண்டுகள்: அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் ஒரு நல்ல வழி. இதில் ரிஸ்க் இருந்தாலும் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தைப் பெறலாம். ஆண்டுக்கு சராசரியாக 10-12 சதவீதம் வருமானம் எதிர்பார்க்கலாம். நிபுணர்களின் ஆலோசனையின்படி எந்தவொரு சிறந்த ஃபண்டிலும் ஒவ்வொரு மாதமும் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால், சுமார் 12 சதவீத லாபம் கிடைக்கும்போது, 15 ஆண்டுகளில் சுமார் ரூ. 50.45 லட்சம் கிடைக்கும்.

Health Care Insurance

மருத்துவக் காப்பீடு: குழந்தைகளுக்கான நிதித் திட்டமிடலில் மருத்துவக் காப்பீடும் மிக முக்கியமானது. குடும்பம் உருவான பிறகு அது அவசியமாகிறது. மருத்துவக் காப்பீடு இல்லையென்றால், எதிர்பாராத நேரத்தில் சேமிப்புகளை செலவிட வேண்டியிருக்கும். பிறகு பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு நிதி இல்லாமல் சிரமப்பட வேண்டிய நிலை உண்டாகும். அதனால்தான் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு எடுப்பது நல்லது.

Life Insurance

ஆயுள் காப்பீடு: எதிர்பாராத சூழ்நிலைகளில் குடும்பத்தில் சம்பாதிப்பவருக்கு ஏதாவது நேர்ந்தால் ஆயுள் காப்பீடு குடும்பத்திற்கு துணை நிற்கிறது. குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. விரிவான டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். 30 வயதான நபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கான டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால், ஆண்டு பிரீமியம் சராசரியாக ரூ.14000 முதல் 18000 வரை இருக்கும்.

Latest Videos

click me!