LPG New Rules: ஜூன் 1 (இன்று) முதல் மாறும் ரூல்ஸ்! இனி இஷ்டத்துக்கு கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாது!

Published : Jun 01, 2026, 11:29 AM IST

LPG New Rules: இந்தியாவில் ஜூன் 1 முதல் அதாவது இன்று முதல் கேஸ் சிலிண்டர் ரூல்ஸ் மாறுகிறது. என்னென்ன விதிகள் மாறியுள்ளன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
ஜூன் 1 முதல் கேஸ் சிலிண்டர் புதிய ரூல்ஸ்

இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விநியோகம், முன்பதிவு மற்றும் பயன்பாடு தொடர்பான புதிய விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் 1 முதல் அதாவது இன்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளன. என்னன்னெ விதிகள் மாறியுள்ளன? புதிய ரூல்ஸ் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

25
பிஎன்ஜி (PNG) இணைப்பு இருந்தால் எல்பிஜி (LPG) கிடையாது

நகர்ப்புறங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்படும் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வைத்திருப்பவர்கள், இனி புதிய எல்பிஜி சிலிண்டர் இணைப்பைப் பெற முடியாது. ஒருவேளை நீங்கள் சமீபத்தில் பிஎன்ஜி இணைப்பிற்கு மாறியிருந்தால், உங்களிடம் இருக்கும் பழைய எல்பிஜி கேஸ் இணைப்பை அடுத்த 30 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக துண்டித்து, சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

35
இனி உடனுக்குடன் சிலிண்டர் புக் செய்ய முடியாது

ஒரே குடும்பத்தினர் குறுகிய காலத்திற்குள் பல சிலிண்டர்களை முன்பதிவு செய்து பதுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் அடுத்தடுத்த சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே புதிய காலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:

அதாவது நகப்புறங்களில் ஒரு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதில் இருந்து அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தது 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் தான் இனி சிலிண்டர் புக் செய்ய முடியும். கிராமப்புறங்களில் இந்த விநியோக இடைவெளி 45 நாட்களாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் புக் செய்து அடுத்த சிலிண்டர் புக் செய்ய 45 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.

45
இனி ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்பு மட்டுமே

ஒரே முகவரியில் அல்லது ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி விதிகளுக்கு புறம்பாக பல கேஸ் இணைப்புகள் வைத்திருப்பவர்களை கண்டறிய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு, தேவையற்ற கூடுதல் இணைப்புகள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக ரத்து செய்யப்படும்.

55
ஓடிபி (OTP) மற்றும் கேஒய்சி (KYC) கட்டாயம்

இனி சிலிண்டர் டெலிவரியின் போது முறைகேடுகளைத் தவிர்க்க, வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபிஐ ஊழியரிடம் காண்பிப்பது முழுமையாக கட்டாயமாக்கப்படுகிறது. இனி சிலிண்டர் டெலிவரியின்போது ஓடிபி சொன்னால்தான் சிலிண்டர் கிடைக்கும். மேலும், நீண்ட நாட்களாக கேஒய்சி விவரங்களை புதுப்பிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாக கேஸ் ஏஜென்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories