NPS
எதிர்காலத்திற்காக பணத்தை ஓய்வுகாலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பை விரும்பினால் உங்களுக்கான ஒரு சிறப்பு திட்டம் உள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்பு அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது தான் அந்த திட்டம்.
NPS
இந்த திட்டத்தில் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் மனைவியும் பணம் சம்பாதிப்பதில் உங்களுக்கு உதவ முடியும். உங்கள் மனைவி பெயரில் புதிய பென்ஷன் சிஸ்டம் (NPS) கணக்கைத் தொடங்கலாம். NPS கணக்கு 60 வயதில் மனைவிக்கு மொத்த தொகையை வழங்கும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பலனைப் பெறுவீர்கள். இது மனைவியின் வழக்கமான வருமானமாக இருக்கும். NPS கணக்கின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். இதனால் 60 வயதிலும் பணம் குறித்த டென்ஷன் ஏற்படாது.
NPS
உங்கள் மனைவி பெயரில் புதிய ஓய்வூதிய முறை (தேசிய ஓய்வூதிய திட்டம்) கணக்கை நீங்கள் தொடங்கலாம். உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் அல்லது வருடமும் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். வெறும் 1,000 ரூபாயில் இந்த கணக்கை தொடங்க முடியும். NPS கணக்கு 60 வயதில் முதிர்ச்சி அடையும். எனினும் புதிய விதிகளின்படி, உங்கள் மனைவிக்கு 65 வயதாகும் வரை நீங்கள் NPS கணக்கைத் தொடரலாம்.
NPS
உதாரணமாக உங்கள் மனைவிக்கு இப்போது 30 வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் NPS கணக்கில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு ஆண்டுக்கு 60,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். தொடர்ந்து 30 ஆண்டுகள் தொடர்ந்தால் மொத்த முதலீடு ரூ.18 லட்சமாக இருக்கும். ஆனால், நீங்கள் ஓய்வுபெறும் போது உங்களிடம் ரூ.1,76,49,569 பெரிய நிதி இருக்கும். ஆனால் 12 % ஆண்டு வட்டி என்ற அடிப்படையில் கூட்டு வட்டி காரணமாக நீங்கள் இந்த பெரும் தொகையை பெற முடியும்.
NPS
இதில் வட்டி வருமானமாக மட்டும் ரூ.1,05,89,741 கிடைக்கும். இங்கு சராசரி வட்டியை 12 சதவீதமாக வைத்துள்ளோம். இப்போது முதலீடு ரூ. 18 லட்சம் முதலீட்டிற்கு கூட்டு வட்டி மூலம் ரூ. 1 கோடி வருமானம் பெற முடியும்.
NPS
NPS கணக்கின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். உங்கள் மனைவியின் கணக்கு 60 வயதில் முதிர்ச்சியடையும் போது, நீங்கள் மொத்தமாக ரூ.1,05,89,741 பெறுவீர்கள்.
NPS
NPS என்பது மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் தொழில்முறை நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே NPS இல் உங்கள் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது. இருப்பினும், எந்தவொரு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று முதலீடு செய்வது நல்லது.