Gold
இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாகும். நகைகள், ஆபரணங்கள் என்பதை சேமிப்பு மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காகவும் பலரும் தங்கத்தை வாங்குகின்றனர். ஆனால் தங்கத்தின் நீண்ட ஆயுளையும் பராமரிக்கவும், அதன் வடிவமைப்பை மேம்படுத்தவும் பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகளை வாங்க பரிந்துரைக்கப்படுகிறது. எனவே பழைய தங்கத்தை மாற்றுவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Gold
நகைக்கடை பிராண்டு
தங்க நகை வாங்கும் போதே அங்கீகரிக்கப்பட்ட பிராண்ட்களில் இருந்து வாங்குவது நல்லது. நகைகளில் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதும் முக்கியம். ஏனெனில் ஹால்மார் தங்க நகைகளை வாங்குவதால் அதை தங்கத்தை மறு விற்பனை செய்யும் போது நல்ல விலைக்கு விற்க முடியும். தங்கத்தின் பரிவர்த்தனையை இறுதி செய்வதற்கு முன், சந்தையின் போக்கையும் அவசியம் சரிபார்க்க வேண்டும். நகை கணக்கீடு பற்றி நகைக்கடை ஊழியர்களிடமிருந்து தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தங்கம் விலை மற்றும் கட்டணங்கள் எவ்வாறு கழிக்கப்படுகின்றன போன்ற விவரங்களை கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம்.
Gold
தங்க சான்றிதழ்
தங்கச் சான்றிதழை எடுத்துச் செல்லுங்கள், அது எடை மற்றும் தூய்மையைக் கண்டறிய உதவும். உங்களின் அனைத்து பில்கள் மற்றும் பதிவையும் வைத்திருப்பது நல்லது. இது தங்க நகைகளின் செல்லுபடியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் எடையைக் கண்காணிக்கவும் உதவிகரமாக இருக்கும். தங்கத்தின் அசல் எடைக்கான விலைப்பட்டியலைப் பார்த்துவிட்டு, பழைய நகைகளை மாற்றும் போது கூடுதல் தெளிவு கிடைக்கும்.
Gold
நகைகளின் எடை
பழைய தங்க நகைகளை மாற்றும் போது, கற்கள் மற்றும் பிற அலங்காரங்கள் இல்லாத நகைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.. கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை மாற்ற நினைத்தால், அதற்கு முன் அவற்றை அகற்றுவது சிறந்தது. இதன் மூலம் பழைய தங்கத்தை மாற்றும் போது அதற்கு அதிக மதிப்பு கிடைக்கும்.
Gold jewellery
ஹால்மார்க்
புதிய தங்க நகைகளை வாங்கும் போதும் அல்லது பழைய நகைகளை மாற்றினாலும் தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் ஹால்மார்க் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகையிலும், ஹார்ல்மார்க்கின் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு, தற்போது ஒவ்வொரு தங்க நகைகளின் நம்பகத்தன்மையை சோதிக்க உதவும் HUID எண்ணைக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. எனவே உங்கள் பழைய தங்க நகைகளை மாற்றும் போது இந்த விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டிய முக்கியம்.