பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பமாயமாதல் அதிகரித்து வருகிறது. இது உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது. இதைத்யொட்டி, கரியமிலவாயு வெளியீட்டை குறைக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், 2030ம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியீட்டை குறைப்பது என உலக நாடுகளும் இலக்கு நிர்ணயம் செய்து தன்னாலன முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதில் இந்தியாவும் ஒன்று.
Solar Giga Factory
இதையொட்டி, முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் குழுமம், தனது கவனத்தை பசுமை எரிசக்தி பக்கம் திருப்பியுள்ளது. இதற்காக, குஜராத் மாநிலம் ஜாம் நகரில் மிகப்பெரிய solar giga factory நிறுவியுள்ளது. இந்த ஆலை நடப்பு நிதி ஆண்டிலேயே (2024-25) செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செல் உற்பத்தி!
இந்த solar giga factory செயல்பாட்டுக்கு வரும்போது பிவி மாடுல் (PV module), செல் (cell), வேஃபர்ஸ் (wafers), பாலிசிலிகான் (polysilicon) கிளாஸ் (glass) அனைத்தும் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. புதிய சோலார் ஆலை தொடங்கியவுடன் முதல் கட்டமாக செல் உற்பத்தியில் ஈடுபடும் என ரிலையன்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
BSNL SIM : வீட்டிலிருந்தே பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சிம்களை ஆர்டர் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
காத்திருக்கும் அபரிமிதமான வளர்ச்சி
ரிலையன்சின் சோலார் பேனல்களுக்கு BIS தரச் சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பசுமை எரிசக்தி துறை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் துறையாக இருக்கும் என்வும், மற்ற தொழில்துறைகளை விட 5 முதல் 7 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளது.