பரணி பிக்சர்ஸ்
பழம்பெரும் நடிகை பானுமதி தொடங்கியது தான் இந்த பரணி பிக்சர்ஸ் நிறுவனம். பின்னர், 1950களில் இது பரணி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பரணி பிக்சர்ஸ் 1948 முதல் 1987ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்களை தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதுல்
குஜராத்தில் தொடங்கப்பட்ட மற்றொரு நிறுவனம் தான் அதுல், இது ஒரு ரசாயன பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். தொடர்ச்சியான வளர்ச்சியால் அண்மையில் BSE and NSE-யில் பட்டியலிடப்பட்டுளது. இன்றுவரையும் இயங்கி வரும் இந்நிறுவனம் ரசாயன பொருட்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறது.
அகமதாபாத் முனிசிபல் போக்குவரத்து கழகம்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட முனிசிபல் போக்குவரத்து கழகம் பொதுமக்களுக்கு பேருந்து சேவையை வழங்கி வந்தது. 1947ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அக்காலத்தில் பேருந்து கட்டணமாக ஒரு அனா முதல் மூன்று அனா வரை வசூலிக்கப்பட்டது. இப்போது அந்த காசுகள் செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது. 78 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் கூட ahmedabad municipal transport service மக்களுக்கான சேவையை ஆற்றி வருகிறது.
ரூ.107 & ரூ.108-க்கு 35நாளுக்கான ரீசார்ஜ் பிளானா? சான்சே இல்ல! - அதிரவிடும் BSNL!
டெல்லி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்
தலைநகர் டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு 1947ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தொடங்கப்பட்டது தான் டெல்லி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். BSE-யுடன் போட்டிபோட முடியாமல் 2017-ம் ஆண்டு வர்த்தக தொழிலில் இருந்து வெளியேறியது.
Exide Industries
மேற்குவங்க மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு 'எக்சைட் இண்டஸ்ட்ரி' எனும் பேட்டரி நிறுவனம் 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போதும் இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படும் பேட்டரி நிறுவனமாக வளர்ந்துள்ளது. 60 நாடுகளுக்கு பேட்டரி ஏற்றுமதி செய்து வருகிறது.
PTI செய்தி நிறுவனம்:
இந்தியாவின் முன்னணி செய்தி முகமையான PTI எனப்படும் பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கப்பட்டது. அதே 1947ல் சென்னையில் PTI நிறுவனம் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாக தொடங்கப்பட்டது. அப்போது, தி இந்து குழுமத்தின் கஸ்தூரி சீனிவாசன் நிறுவனத் தலைவராக இருந்தார். இப்பொழுதும் இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு வெற்றிகரமான செய்தி நிறுவனம் PTI.