மொபைல் தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்டவை அடிப்படை ரீசார்ஜ் பிளான் கட்டணத்தை உயர்த்தியது. ஆனால், BSNL மட்டும் கம்மி விலையில் பல திட்டங்களை புதிதாக அறிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து, ஏராளமான மக்கள் தங்கள் மொபைல் எண்களை BSNL-க்கு மாற்றி வருகின்றனர்.
மேலும், வரும் மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்க (BSNL)பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவையும் வழங்க அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. BSNL வெறும் ரூ.107 மற்றும் ரூ.108க்கு 35 நாட்களுடன் கூடிய ப்ரிபெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.