இந்தியாவில் தங்கம் என்பது மிகவும் மதிப்புமிக்க ஆபரணமாக கருதப்படுகிறது. வெறும் நகைகள், அணிகலன்கள் மட்டுமின்றி தங்கம் என்பது சேமிப்பு மற்றும் முதலீடு நோக்கங்களுக்காகவும் பலரும் தங்கத்தை வாங்கி வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்கள்ம் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் வேகமாக குறைந்த தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.4000 வரை குறைந்தது.