இந்திய ரயில்வே மூலம் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ரயில்வே விதிகளின்படி யாரும் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியாது. அப்படி யாராவது செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், ரயில்வே விதிகளின்படி, அவருக்கு அபராதம் விதிக்கப்படும். இதுமட்டுமின்றி, ரயில் நிலைய நடைமேடைக்கு ஒருவர் சென்றால், பிளாட்பாரம் டிக்கெட் வாங்க வேண்டும்.