உலகமே இப்போது கணினி மயமாகி வருகிறது. சில காலத்திற்கு முன்பு பணம் எடுக்கவோ, பணம் செலுத்தவோ வங்கிகளுக்கு சென்றே அப்பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதனை எளிமையாக்கும் வகையில் ஏடிஎம் என்ற நவீன சேவையை வங்கிகள் அறிமுகப்படுத்தின. அனைத்து சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்குதாரர்களுக்கு கணக்கு தொடங்கும் போது ஒரு ஏடிஎம் கார்டு கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் ஏடிஎம் மையங்களில் எளிதாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ATM மூலம் பணம் எடுக்கும் வரம்பு என்ன?
ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு தனிநபர் தனது சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கிலிருந்து எடுக்கக்கூடிய அதிகபட்ச பணத்தைக் குறிக்கிறது. அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும் மேலும், கணக்கின் வகையைப் பொறுத்ததும் மாறுபடும்.
நாட்டில் உள்ள சில முன்னணி வங்கிகளின் (HDFC, SBI, ICICI PNB ) ஏடிஎம் கார்டு மூலம் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
sbi atm
SBI ATM
உங்களிடம் மேஸ்ட்ரோ டெபிட் கார்டு அல்லது கிளாசிக் டெபிட் கார்டு இருந்தால், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரை எடுக்கலாம்.
எஸ்பிஐ பிளாட்டினம் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை பணம் எடுக்கலாம்.
இருப்பினும், உங்கள் SBI கணக்கு வகை மற்றும் டெபிட் கார்டின் விதிமுறைகளைப் பொறுத்து இந்த வரம்புகள் மாறலாம்.
78 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் தொடரும் நிறுவனங்களின் தற்போதைய நிலை!
HDFC ATM
உங்கள் HDFC கணக்குடன் NRO டெபிட் கார்டுகள் இணைக்கப்பட்டிருந்தால், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.25,000 வரை எடுக்கலாம்.
சர்வதேச வணிகம், டைட்டானியம் அல்லது தங்கப் கடன் அட்டைகள் உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், நாள் ஒன்றுக்கு ரூ.50,000 வரை எடுக்கலாம்.
.
உங்கள் கணக்கு Titanium Royale டெபிட் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால்ரூ.75,000 வரையும், பிளாட்டினம் மற்றும் இம்பீரியா பிளாட்டினம் சிப் டெபிட் கார்டுகள் ரூ.1,00,000. வரை எடுக்கலாம்.
JetPrivilege HDFC வங்கி வேர்ல்ட் டெபிட் கார்டு உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், ஒரு நாளைக்கு 3,00,000 ரூபாய் வரை எடுக்கலாம்.
icici bank
ICICI ATM
ஐசிஐசிஐ வங்கியின் கோரல் பிளஸ் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 1,50,000 வரை பணம் எடுக்க முடியும்.
உங்கள் கணக்கில் ICICI எக்ஸ்பிரஷன், பிளாட்டினம் அல்லது டைட்டானியம் டெபிட் கார்டு இணைக்கப்பட்டிருந்தால், ரூ.1,00,000 வரை எடுக்க முடியும்.
ஐசிஐசிஐ ஸ்மார்ட் ஷாப்பர் சில்வர் டெபிட் கார்டுக்கு ஏடிஎம் மூலம் தினசரி ரூ.50,000 வரை எடுக்கலாம்.
உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி சஃபிரோ டெபிட் கார்டு இருந்தால், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.2,50,000 வரை எடுக்கலாம்.
ஆக்சிஸ் ஏடிஎம்
உங்களிடம் ரூபே பிளாட்டினம் அல்லது பவர் சல்யூட் டெபிட் கார்டு இருந்தால், ஒரு நாளைக்கு ரூ.40,000 எடுக்கலாம்.
Liberty, Online Rewards, Rewards Plus, Secure Plus, Titanium Rewards மற்றும் Titanium Prime டெபிட் கார்டுகள் மூலம் ரூ.50,000 வரை எடுக்கலாம்.
உங்களிடம் ப்ரெஸ்டீஜ், டிலைட் அல்லது வேல்யூ பிளஸ் டெபிட் கார்டு இருந்தால், ஒரு நாளைக்கு ரூ.1,00,000 வரை எடுக்கலாம்.
ஆக்சிஸ் பேங்க் பர்கண்டி டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.3,00,000 வரை எடுக்கலாம்.