உலகப்பணக்காரர்கள் பட்டியலில் சரிந்த முகேஷ் அம்பானி.. பின்னுக்குத் தள்ளியது யார்? என்ன காரணம்??

Published : Aug 27, 2024, 11:20 AM IST

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி தற்போது 12வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளியது யார்?

PREV
16
உலகப்பணக்காரர்கள் பட்டியலில் சரிந்த முகேஷ் அம்பானி.. பின்னுக்குத் தள்ளியது யார்? என்ன காரணம்??
Mukesh Ambani Faced Setbacks

இந்தியாவிலும் ஆசியாவிலும் மிகப் பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முக்கிய இடத்தை வகித்து வருகிறார். முன்னணி அமெரிக்க நிறுவனமான AI சிப் தயாரிப்பாளரான என்விடியாவின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங், முகேஷ் அம்பானியை முந்தி 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.

26
Mukesh Ambani

புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அம்பானி மற்றும் ஹுவாங்கின் சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலர்கள் ஆகும். இருப்பினும், சில டாலர்கள் வித்தியாசத்தில் ஹுவாங் முன்னிலையில் உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் ஹுவாங்கின் நிகர மதிப்பு 4.73 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது, அதே நேரத்தில் அம்பானியின் நிகர மதிப்பு 12.1 மில்லியன் டாலர்கள் அதிகரித்தது.

36
World’s Richest People

இந்த ஆண்டு எரிடியாவின் பங்குகள் கூர்மையாக உயர்ந்துள்ளன. இது ஹுவாங்கை இந்த ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய பில்லியனராக மாற்றியுள்ளது. இந்த ஆண்டு அவரது நிகர மதிப்பு 69.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. அவரைத் தொடர்ந்து மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பு இந்த ஆண்டு  59.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.

46
Bloomberg Billionaires Index

188 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜுக்கர்பெர்க் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல் இங்கே பார்க்க்கலாம். முதல் இடத்தை எலான் மஸ்க் - சொத்து மதிப்பு - 244 பில்லியன் டாலர்கள், 2ம் இடத்தை பெர்னார்ட் அர்னால்ட் - சொத்து மதிப்பு -  201 பில்லியன் டாலர்கள்.

56
Reliance Industries

3ம் இடத்தை ஜெஃப் பெசோஸ் - சொத்து மதிப்பு - 200 பில்லியன் டாலர்கள், 4ம் இடத்தை பில்கேட்ஸ், - சொத்து மதிப்பு - 159 பில்லியன், 5ம் இடத்தை லாரி எலிசன் - சொத்து மதிப்பு - 154 பில்லியன் டாலர்கள், 6ம் இடத்தை லாரி பேஜ் - சொத்து மதிப்பு - 149 பில்லியன் டாலர்கள் உடனும் பிடித்துள்ளனர்.

66
Gautam Adani

மேலும் 7ம் இடத்தை ஸ்டீவ் பால்மர் - சொத்து மதிப்பு - 145 பில்லியன் டாலர்கள், 8ம் இடத்தை வாரன் பஃபெட், - சொத்து மதிப்பு - 143 பில்லியன் டாலர்கள், 9ம் இடத்தை செர்ஜி பிரின் - சொத்து மதிப்பு - 141 பில்லியன் டாலர்கள் மற்றும் 104 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி பட்டியலில் 15வது இடத்தலும் உள்ளார்.

3% அதிகரிப்பு எப்போ தெரியுமா? பறந்து வந்த 7வது சம்பள கமிஷன் அப்டேட்.. செக் பண்ணுங்க!

Read more Photos on
click me!

Recommended Stories