ஏடிஎம்மை தேடி அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பணத்தைக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ்!!

First Published | Aug 26, 2024, 11:25 PM IST

போஸ்ட் ஆபீசில் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம்மைத் தேடிச் சென்று பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீடு தேடி வந்து பணத்தைக் கொடுக்கும் வசதி இருக்கிறது! அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம்.

Post Office Payments Bank

தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) ஆதார் மூலம் வீட்டிற்கே வந்து பணத்தை டெலிவரி செய்யும் வசதியை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக்கைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம்.

What is AePS?

AePS எனப்படும் இந்த சேவை போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கில் வீட்டில் இருந்தபடியே பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு உதவுகிறது. இதற்கான அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

Latest Videos


India Post IPPB account

இந்த வகையான பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச வரம்பு ரூ.10,000 என்று நேஷனல் பேமெண்டஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நிர்ணயம் செய்துள்ளது.

AePS options

AePS சேவை மூலம் போஸ்ட் பேமெண்ட் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். இருப்புத்தொகை எவ்வளவு என்று பார்க்கலாம், மினி ஸ்டேட்மென்ட் கோரலாம், மற்றொரு கணக்கிற்குப் பணத்தை மாற்றலாம்.

Who can avail AePS?

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத்தான் இந்தச் சேவை கிடைக்கும். அவசரத் தேவைகளின்போது இந்த ஹோம் டெலிவரி சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கிடைக்கும் பெரும்பாலான சேவைகளுக்கு பரிவர்த்தனை கட்டணங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

How to use AePS?

AePS வசதியை பயன்படுத்த, போஸ்ட் பேமெண்ட் வங்கியில்  கணக்கு தேவை. ஆதார் எண்ணையும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

AePS rules

ஒரே வங்கியில் பல கணக்குகளை வைத்திருந்தால், முதன்மை கணக்கின் மூலம் மட்டுமே AePS சேவைகளை பயன்படுத்த முடியும் என்பதையும் நினைவில்கொள்ளவும்.

click me!