யார் இந்த மாயா டாடா?
நோயல் டாடா மற்றும் ஆலு மிஸ்ட்ரிக்கு மகளாக பிறந்தவர் மாயா டாடா. மாயா டாடாவின் தந்தை ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதர். அதே போன்று அவரது தாயார், மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி. ஆதலால் டாடா குழுமத்துடன் பிணைந்துள்ளார்.
டாடா குழுமத்தில் ஒருவராக முக்கிய பங்கு வகிக்கிறார், பேய்ஸ் பிசினஸ் ஸ்கூல் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தில் படித்தவர். டாடா ஆப்பர்ஜூனிட்டிஸ் ஃபண்ட் மற்றும் டாடா டிஜிட்டல் ஆகியவற்றிற்கு மாயா டாடா பங்களித்துள்ளார். மேலும், டாடா நியூ ஆப் அறிமுகத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியா டாடா:
ஹாஸ்பிட்டாலிட்டியில் கவனம் செலுத்துகிறார். ஸ்பெயினில் உள்ள IE பிசினஸ் பள்ளியில் படித்துள்ளார். இந்திய ஹோட்டல் நிறுவனம் மற்றும் தாஜ் ஹோட்டல்களில் அவர் குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளார், ஹாஸ்பிட்டாலிட்டியில் டாடா குழுமத்தை மேலும் விரிவுபடுத்த உதவினார்.