சவூதி அரேபியாவின் ஆளும் அரச குடும்பமான ஹவுஸ் ஆஃப் சவுத் (House Of Saud ) குடும்பதான் உலக அளவில் பணக்கார குடும்பமாக கருதப்படுகிறது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு எலான் மஸ்க், முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் கௌதம் அதானி போன்ற உயர்மட்ட கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை விட அதிகம். ஆம். உலகின் பணக்கார குடும்பத்தின் சொத்து மதிப்பு 1.4 டிரில்லியனை விட அதிகமாகும்.
சவுத் ஹவுஸ்
இந்த அரச வம்சம் 1744 இல் நிறுவப்பட்டதிலிருந்து , ஹவுஸ் ஆஃப் சவுத் உலகின் மிகவும் வசதியான மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த குடும்பத்தில் சுமார் 15,000 உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும் இந்த குடும்பத்தின் செல்வம் மற்றும் செல்வாக்கின் பெரும்பகுதி சுமார் 2,000 நபர்களைக் கொண்ட முக்கிய குழுவில் குவிந்துள்ளது.
குடும்பத்தின் செல்வம் முதன்மையாக மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்கள் மற்றும் முதலீடுகளிலிருந்து பெறப்பட்டது. தற்போதைய மன்னரான மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் குடும்பத்தை வழிநடத்துகிறார், அவரின் தனிப்பட்ட நிகர மதிப்பு $18 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய குடும்ப உறுப்பினரான இளவரசர் அல்வலீத் பின் தலால் ஒருமுறை 13.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டிருக்கிறார்.