ரூ.17 லட்சம் கார்பஸ் கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! தினமும் ரூ.333 சேமித்தால் போதும்!

First Published | Oct 9, 2024, 4:25 PM IST

போஸ்ட் ஆபிஸ் பல சிறு சேமிப்புத் திட்டங்களை நடத்துகிறது. பிரபலமான RD திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எப்படி 17 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டுவது என்று பார்க்கலாம்.

Post Office Schemes

போஸ்ட் ஆபிஸ் பல சிறு சேமிப்புத் திட்டங்களை நடத்துகிறது. அவற்றில் ஒன்று தொடர் வைப்புநிதி திட்டம். அதாவது ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம். இதில் மாதத்திற்கு 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.

Recurring Deposit

ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து முதலீடு செய்கிறார்கள். அதுவும் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். முதலீட்டில் இருந்து நல்ல வட்டி கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

Tap to resize

Post Office RD Scheme

போஸ்ட் ஆபிஸ் மூலம் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் தினசரி ரூ.333 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.17 லட்சத்துக்கும் அதிகமான தொகையைத் திரட்டலாம். இதற்கு போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இது முதலீட்டாளர்களுக்கு பெரிய வருமானத்தைக் கொடுக்கும் உண்டியல் போல செயல்படுகிறது.

Post Office RD Interest Rate

தபால் அலுவலகத்தின் மற்ற அனைத்து சேமிப்பு திட்டங்களைப் போலவே RD திட்டத்தில் செய்யும் முதலீடும் முற்றிலும் ஆபத்து இல்லாதது. இதில் முதலீடு செய்யும் பணத்தின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்,

Post Office RD rules

ஏனென்றால் எந்த மாதத்திலும் தவணை செலுத்த மறந்துவிட்டால், 1% அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து 4 தவணைகளைத் டெபாசிட் செய்யத் தவறினார், இந்தக் கணக்கு தானாகவே மூடப்படும். இதைத் தவிர்க்க முதிர்வு காலம் வரை மாதம் தோறும் விடாமல் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.

Post Office RD Investment

போஸ்ட் ஆபிஸ் RD கணக்கின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். குறைந்தபட்சம் மாதம் ரூ.100 முதலீடு செய்து தொடர் வைப்பு கணக்கு (RD) திறக்கலாம். தனியாக அல்லது கூட்டு கணக்கு தொடங்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வட்டி, தற்போது 6.8 சதவீதமாக உள்ளது. முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், இந்த வட்டியின் பலனையும் பெறுலாம்.

Post Office RD 5 year investment

தபால் அலுவலகத்தின் இந்த பிரபலமான திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எப்படி 17 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டுவது என்று பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் தினமும் 333 ரூபாய் முதலீடு செய்தால், மாதத்திற்கு சுமார் 10,000 ரூபாய் வரும். அதாவது ஆண்டுக்கு 1.20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். 5 வருடம் கழித்து, முதிர்வு காலத்தில், ரூ. 5,99,400 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். இதற்கு 6.8 சதவீதம் கூட்டு வட்டி ரூ.1,15,427 கிடைக்கும். மொத்தத் தொகை ரூ.7,14,827 ஆகும்.

Rs 17 Lakh from Post Office Scheme

போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை 5 ஆண்டு முதிர்வு காலத்துக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அதாவது, தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்து வரவேண்டும். அப்போது, 10 வருட முடிவில் டெபாசிட் செய்த தொகை ரூ.12,00000 ஆகவும், அதற்கான வட்டி ரூ.5,08,546 ஆகவும் இருக்கும். மொத்தமாக ரூ.17 லட்சத்துக்கு மேல் வந்துவிடும். அதாவது 10 வருட ஆர்.டி. முடியும்போது ரூ.17,08,546 கிடைக்கும்.

Latest Videos

click me!