அமெரிக்காவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்த இருப்பதும், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதும் தங்கத்தின் விலையேற்றத்துக்குக் காரணமாக உள்ளது.
கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்குத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் இல்லத்தரசிகள் நகை வாங்கும் ஆர்வத்தை மட்டும் கைவிடவில்லை.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,760க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,595க்கும் விற்பனையானது.
இன்றைய (மே 31) நிலவரப்படி, சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரனுக்கு 400 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.