குறுகிய காலத்தில் லாபத்தைக் கொட்டிக் கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

First Published | Sep 21, 2024, 5:07 PM IST

குறைவான காலத்தில் அதிக வருமானம் கொடுக்கும் போஸ்டா ஆபிஸ் திட்டங்களில் ஒன்று மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம். இந்தப் சிறப்புத் திட்டத்தில் பெண்கள் எப்படி முதலீடு செய்யலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

What is Mahila Samman Savings Certificate?

தபால் துறை மூலம் அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் பல சிறுசேமிப்புத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு பிரத்யேகத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிகவும் லாபகரமான திட்டங்களில் ஒன்றுதான் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம். இத்திட்டம் குறுகிய கால முதலீட்டுக்கு அதிக வருமானம் கொடுக்கிறது.

Mahila Samman Savings Certificate for Girl Child

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் பெண்களுக்கான சிறப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு 7.5% வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. குறுகிய காலத்தில் பணத்தைப் பெருக்க விரும்பும் பெண்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Tap to resize

Mahila Samman Savings Certificate in Banks

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் 2 ஆண்டு முதிர்வுக் காலம் கொண்டது. இத்திட்டத்தில் பெண்கள் அதிக பட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏராளமான பெண்கள் இந்தப் போஸ்ட் ஆபீஸ் திட்டம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

Mahila Samman Savings Certificate Tax benefits

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி மூலம் இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வருமானத்துக்கு கூடுதல் வரிச் சலுகை பெறலாம். இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கும் சேர்ந்துகொள்ளலாம். அடுத்த தலைமுறை பெண் குழந்தைகளுக்கு பொருளாதாரப் பாதுகாப்பைக் ஏற்படுத்த உதவுகிறது.

Mahila Samman Saving Certificate Interest

மகிளா சம்மான் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மொத்தமாக முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில் முதல் ஆண்டில் ரூ.15,000 ரூபாய் வட்டி கிடைக்கும். இரண்டாவது ஆண்டில் ரூ.16,125 கிடைக்கும். முதிர்வுக் காலத்தில் அசல் தொகையான ரூ.2 லட்சத்துடன் ரூ.31,125 வட்டியும் சேர்த்து ரூ.2,31,125 முதிர்வுத் தொகையாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Mahila Samman Savings Scheme

இந்தக் கணக்கு வைத்திருப்பவர் முதிர்வுக் காலத்திற்கு முன் இறந்துபோனால், நாமினி அல்லது குடும்ப உறுப்பினருக்கு டெபாசிட் செய்யப்பட்ட தொகை வழங்கப்படும். ​​மருத்துவ சிகிச்சைக்காகவும் டெபாசிட் செய்தத் தொகையைத் திரும்பப் பெற்றுகொள்ளலாம். முதிர்வுக் காலத்திற்கு முன்பே கணக்கு முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

Mahila Samman Savings Certificate

போஸ்ட் ஆபீஸ் தவிர சில வங்கிகளிலும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும். பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளிலும் இந்தத் திட்டம் உள்ளது.

Latest Videos

click me!