200 ரூபாய் சேமிச்சா போதும்... 28 லட்சம் மொத்தமாக கிடைக்கும்! எல்ஐசியின் சூப்பர் திட்டம்!!

First Published | Sep 7, 2024, 1:07 PM IST

எல்ஐசி (LIC) வழங்கும் ஜீவன் பிரகதி காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து, தினமும் 200 ரூபாய் சேமித்தால் 20 ஆண்டுகள் கழித்து ரூ.28 லட்சம் மொத்தமாகப் பெறலாம். இதில் விபத்துக் காப்பீடும் அடங்கும்.

LIC Jeevan Pragati Policy

தினமும் ரூ.200 சேமித்து வந்தால் 20 ஆண்டுகளில் ரூ.28 லட்சம் மொத்தமாகக் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் விபத்துக் காப்பீட்டையும் சேர்த்துப் பெறலாம். இந்த அற்புதமான பாலிசையை எல்ஐச வழங்கி வருகிறது. குறைந்தபட்சம் 12 வயது நிரம்பிய அனைவரும் இதில் முதலீடு செய்யலாம்.

LIC Policy

எல்ஐசி இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். குழந்தைகள் முதல் சூப்பர் சீனியர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காப்பீட்டுத் திட்டங்களை குறைந்த முதலீட்டில் வழங்கி வருகிறது. அந்த வகையில் குறைந்த சேமிப்பில் அதிக முதிர்வுத் தொகையைத் தரும் ஜீவன் பிரகதி திட்டத்தை அளிக்கிறது.

Tap to resize

LIC Insurance Policy

எல்ஐசியின் ஜீவன் பிரகதி பாலிசியில் தினமும் ரூ.200 வீதம் முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகள் கழித்து ரூ.28 லட்சம் பெறலாம். புதிய பாலிசி எடுப்பவர்களுக்கும் இது பொருத்தமான திட்டமாக இருக்கும். ஜீவன் பிரகதி பாலிசியில் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நன்மைகளும் உள்ளன.

LIC Policy Maturity

எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு விபத்துக் காப்பீடும் கிடைக்கும். குறைந்தபட்ச வயது வரம்பு 12. அதிகபட்ச வயது வரம்பு 45. பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போதே அவர்கள் பெயரில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Jeevan Pragati Policy

ஜீவன் பிரகதி பாலிசி எடுக்கும் பாலிசிதாரர்களுக்கு வாழ்நாள் பாதுகாப்புடன் உத்தரவாதமான வருமானமும் கிடைக்கும். இந்தப் பாலிசியின் கீழ் அதிகபட்ச லாபத்தைப் பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

LIC Jeevan Pragati Policy premium

ஜீவன் பிரகதி பாலிசியில் தினமும் 200 ரூபாய் முதலீடு செய்தால், ஒரு மாதத்திற்கு ரூ.6000 முதலீடு செய்ய வேண்டிருக்கும். இவ்வாறு ஆண்டுக்கு ரூ.72,000 டெபாசிட் செய்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த முதலீட்டுத் தொகை ரூ.14,40,000 ஆக இருக்கும். இத்துடன் மற்ற பலன்களும் சேர்ந்து ஒட்டுமொத்த முதிர்வுத் தொகையாக ரூ.28 லட்சம் கிடைக்கும்.

Jeevan Pragati Policy

எல்ஐசி ஜீவன் பிரகதி பாலியில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் ரிஸ்க் கவர் அதிகரிக்கப்படுகிறது. அதாவது 5 ஆண்டுக்கு கிடைக்கும் முதிர்வுத்தொகை உயரும். பாலிசிதாரர் மரணம் அடைந்தால், காப்பீட்டுத் தொகை ரிவர்ஷனரி போனஸ் மற்றும் இறுதி போனஸ் ஆகியவை இரண்டும் சேர்த்து கிடைக்கும். இந்தப் பாலிசியின் குறைந்தபட்சம் முதலீட்டுக் காலம் 12 ஆண்டுகள். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.

LIC Policy benefits

இந்த பாலிசிக்கான பிரீமியம் செலுத்தவும் வெவ்வேறு வாய்ப்புகள் உள்ளன. காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு தோறும் ப்ரீமியம் செலுத்தலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1.5 லட்சம். அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. ரூ.2 லட்சத்துக்கு பாலிசி எடுத்தால், இறப்பு பலன் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சாதாரணமாக இருக்கும். பிறகு, 6-10 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சமாக மாறும். 10-15 ஆண்டுகளில் ரூ.3 லட்சமாகக் கூடும்.

Latest Videos

click me!