எல்ஐசியின் புதிய ஜீவன் ஆனந்த் திட்டம் சேமிப்பு மற்றும் பாதுகாப்பான திட்டமாக உள்ளது. தினமும் ரூ.45 சேமிப்பதன் மூலம், சுமார் ரூ.25 லட்சம் வரை பெறலாம். வரிச் சலுகைகள் இந்த திட்டம் மூலம் பெற முடியும் என்பது சிறப்பாகும்.
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, சேமிப்பும் பாதுகாப்பும் ஒருங்கிணைந்த திட்டமாக ‘புதிய ஜீவன் ஆனந்த்’ (திட்டம் 915) பாலிசியை வழங்குகிறது. தினமும் வெறும் ரூ.45 சேமிப்பதன் மூலம், நீண்ட காலத்தில் பெரிய தொகையை உருவாக்க முடியும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். முதலீட்டாளர்களுக்கு நிதி பாதுகாப்புடன் சேர்த்து வாழ்க்கை காப்பீடு வழங்கப்படுவதால் பலரின் கவனத்தை ஈர்க்கிறது.
25
எல்ஐசி சேமிப்பு திட்டம்
இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், குறைந்த பிரீமியத்தில் நீண்டகால சேமிப்பு வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணமாக, 35 வயதுடைய ஒருவர் 35 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் சம் அஷ்யூர்டன் இந்த பாலிசியை எடுத்தால், ஆண்டுக்கு சுமார் ரூ.16,300 செலுத்த வேண்டும். இது மாதத்திற்கு சுமார் ரூ.1,359 மற்றும் தினசரி ரூ.45 என்ற அளவுக்கு சமமாகும்.
35
எல்ஐசி பாலிசி நன்மைகள்
இந்த காலத்தில் முதலீட்டாளர் மொத்தமாக ரூ.5.7 லட்சம் செலுத்தினாலும், பாலிசியில் கிடைக்கும் தொகை அதிகமாக இருக்கும். தற்போதைய போனஸ் விகிதங்களை அடிப்படையாக கொண்டு, 35 ஆண்டுகளில் சுமார் ரூ.25 லட்சம் வரை லம்ப்சம் தொகை கிடைக்கும். இதில் அடிப்படை காப்பீடு தொகை ரூ.5 லட்சம், ரிவிஷனரி போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸும் சேர்க்கப்பட்டிருக்கும்.
இந்த பாலிசியின் தனித்துவமான அம்சம் “Whole Life Cover” ஆகும். பொதுவாக பல பாலிசிகளில் முதிர்ச்சியடைந்த பிறகு காப்பீடு நிறுத்தப்படும். ஆனால் ஜீவன் ஆனந்த் திட்டத்தில், முதிர்ச்சிக்கு பிறகு ரூ.5 லட்சம் வாழ்க்கை காப்பீடு இலவசமாக தொடர்கிறது. பாலிசி வைத்திருப்பவர் எப்போது மரணமடைந்தாலும், அந்த தொகை நியமிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்.
55
எல்ஐசி ஆயுள் காப்பீடு
மேலும், இந்த திட்டத்தில் வரிச்சலுகையும் கிடைக்கிறது. செலுத்தப்படும் பிரீமியம் வருமான வரி சட்டம் 80C பிரிவின் கீழ் கழிவு பெறும். முதிர்வு மற்றும் மரண நன்மைகள் 10(10D) பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறுகின்றன. அவசர தேவைகளுக்காக 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது. 18 முதல் 50 வயதுக்குள் உள்ள இந்தியர்கள், 15 முதல் 35 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தை தேர்வு செய்து பயன்பெறலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.