தினமும் 87 ரூபாய் சேமித்தால் 11 லட்சம் கிடைக்கும்! இப்படி முதலீடு செய்யுங்க!

First Published | Dec 21, 2024, 9:42 PM IST

எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் தனித்துவமான சேமிப்பு மற்றும் காப்பீட்டுப் பலன்கள் தொகுப்பை வழங்குகிறது. இது காலப்போக்கில் செல்வத்தை குவிக்க உதவுகிறது. அவசரகாலத்தில் நிதி பாதுகாப்பை வழங்குகிறது.

LIC Aadhaar Shila Investments Policy

எல்ஐசி ஆதார் ஷீலா ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும். பாலிசிதாரர் இறந்துவிட்டால், இந்தத் திட்டம் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும். உதாரணமாக, 55 வயதுடைய தனிநபர், அடுத்த 15 ஆண்டுகளுக்கு தினசரி ரூ.87 டெபாசிட் செய்தால், முதல் ஆண்டு முடிவில் மொத்த பங்களிப்பு ரூ.31,755 ஆக இருக்கும்.

LIC Investments

10 ஆண்டுகளில், டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.3,17,550 ஆக இருக்கும். 70 வயதை அடையும் போது, ​​மொத்தமாக திரட்டப்பட்ட தொகை ரூ.11 லட்சமாக இருக்கும். பாலிசிதாரர் முழு பாலிசி காலத்திலும் உயிருடன் இருந்தால், அவர்களே முதிர்வுத் தொகையைப் பெறுவார்கள்.

Tap to resize

LIC Policy

முழு பாலிசி காலத்திலும் நீடித்தால், ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் முதிர்வுப் பலனைப் பெறத் தகுதியுடையவர். முதிர்ச்சியடைந்தவுடன், பாலிசிதாரர் மொத்தத் தொகையை புதிய பாலிசியில் மீண்டும் முதலீடு செய்யலாம். இத்திட்டம் பாலிசிதாரரின் மரணத்துக்குப் பின்பும் பலன்களை வழங்குகிறது. காப்பீடு செய்யப்பட்ட நபரின் அகால மரணம் ஏற்பட்டால், அவரது நாமினிக்கு காப்பீட்டின் பலன்கள் வழங்கப்படும்.

LIC Endowment Policy

பாலிசிதாரர்கள் தொடர்ந்து இரண்டு பாலிசி ஆண்டுகளை முடித்த பிறகு தங்கள் பாலிசியை ரிட்டன் செய்ய் விண்ணப்பிக்கலாம். பாலிசியை ஒப்படைத்தவுடன், பாலிசி காலத்தின்போது செலுத்தவேண்டிய உத்தரவாதமான சரண்டர் மதிப்பு, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்திற்கு சமமாக இருக்கும். பாலிசி சரண்டர் மதிப்பை அடைந்த பிறகு முதலீட்டாளர்கள் கடன் பலன்களைப் பெறலாம்.

LIC Insurance Policy

பிரீமியம் செலுத்தும் காலம் பாலிசி காலத்துக்கு சமம். ஆண்டுதோறும், மாதந்தோறும், காலாண்டு தோறும் அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை பிரீமியம் செலுத்தலாம். 8 முதல் 55 வயதுவரை உள்ள அனைத்து பெண்களும் பாலிசிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். பாலிசி 10 முதல் 20 ஆண்டுகள் வரை முதிர்ச்சி அடையும். அதிகபட்ச முதிர்வு வயது 70.

LIC Vehicle Insurance

எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் மூலம் கடன் வசதிகளும் கிடைக்கும். கூடுதலாக, மோட்டார் இன்சூரன்ஸ் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!