ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி சார்ட் போட்ட பிறகும் டிக்கெட் புக் செய்யலாம்.. முழு விவரம்!

Published : Dec 31, 2025, 05:15 PM IST

இந்தியவில் தினமும் பல லட்சகக்ணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வரும் நிலையில், முக்கிய ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகி விட்டது.

PREV
13
ரயிலில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பு

இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பல லட்சகக்ணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வரும் நிலையில், முக்கிய ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகி விட்டது.

23
ரயில் முன்பதிவு சார்ட்

பொதுவாக ஒரு ரயில் புறப்படுவதற்கு முன்பு இரண்டு முறை உறுதிப்படுத்தபட்ட பயணிகளின் பட்டியல் (சார்ட்) வெளியிடப்படும். முன்பு ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு சார்ட் வெளியிடப்பட்ட நிலையில், இப்போது 8 மணி நேரத்துக்கு முன்பாக சார்ட் வெளியிடப்படுகிறது. இது முதல் சார்ட் ஆகும். இரண்டாவது சார்ட் ரயில் புறப்படும் 30 நிமிடங்கள் அதாவது அரை மணி நேரத்துக்கு முன்பாக வெளியிடப்படும்.

33
அரை மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட் புக் செய்யலாம்

ரயில் புறப்படுவதற்கு முன்பு முதல் சார்ட் போட்ட பிறகு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்த நிலையில், இனிமேல் கடைசி சார்ட் போடும் அரை மணி நேரம் முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நீங்கள் விரும்பிய ரயில் கடைசி நேரத்தில் புக் செய்து பயணிகள் பயணிக்க முடியும்.

இருக்கைகள் எண்ணிக்கையை பொறுத்து டிக்கெட்

முதல் சார்ட் போட்ட பிறகு அந்த ரயிலில் பெர்த்கள் காலியாக இருந்தால் அது குறித்து IRCTC தளத்தில் காண்பிக்கப்படும். காலியாக இருக்கும் டிக்கெட்களின் எண்ணிக்கையை பொறுத்து உங்களுக்கு டிக்கெட் கிடைக்கும். 

இந்த ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்ட்டர்களிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories