புத்தாண்டுக்கு முந்தைய நாள் (புத்தாண்டு ஈவ்) நாடு முழுவதும் டெலிவரி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், உணவு டெலிவரி சேவைகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னணி நிறுவனங்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தற்காலிகமாக உயர்த்தியுள்ளன. பண்டிகை மற்றும் பீக் டைம் காலங்களில் அதிக தேவையை சமாளிக்க இது நிறுவனங்கள் பின்பற்றும் வழக்கமான நடைமுறையாகும்.
சோமேட்டோ அறிவித்துள்ள ஆஃபர் படி, டிசம்பர் 31 அன்று மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை பீக் ஹவர்ஸில் ஒரு ஆர்டருக்கு ரூ.120 முதல் ரூ.150 வரை வழங்கப்படும். ஆர்டர்களின் எண்ணிக்கை மற்றும் டெலிவரி பார்ட்னர்களின் எண்ணிக்கையை பொறுத்து, ஒரு நாளில் ரூ.3,000 வரை வருமானம் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறை ஆர்டர்களை நிராகரிப்பது அல்லது ரத்து செய்வதற்கான அபராதங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஸ்விக்கி நிறுவனம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் ரூ.10,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 31 அன்று மாலை 6 முதல் 12 மணி வரை ஆறு மணி நேரத்தில் ரூ.2,000 வரை சம்பாதிக்கலாம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.