Vande Bharat Pets: செல்லப் பிராணியுடன் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம்.. இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் அப்டேட்

Published : Jun 26, 2026, 06:23 PM IST

Vande Bharat Pets: செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்திய ரயில்வே புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, வந்தே பாரத் ரயிலில் செல்லப் பிராணிகளையும் அழைத்துச் செல்லலாம்.

PREV
13
ரயில் பயணத்தில் புதிய வசதி
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் செல்லப் பிராணிகளுக்காக ஒரு சிறப்பு வசதியை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. செல்லப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இனி பயணங்களின்போது அவற்றை தனியாக விட்டுச் செல்ல வேண்டியதில்லை. நீங்களும், உங்கள் செல்லப் பிராணியும் ஒன்றாகவே பயணிக்கலாம்.
23
பெட் பாக்ஸ்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 'பெட் பாக்ஸ்' என்ற வசதி உள்ளது. இது ரயிலின் இருபுறமும் இன்ஜினுக்கு அருகில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த வசதியை ஆன்லைனில் புக் செய்ய முடியாது. ரயில் புறப்படும் ஸ்டேஷனில் உள்ள பார்சல் அல்லது லக்கேஜ் அலுவலகத்திற்குச் சென்றுதான் புக் செய்ய வேண்டும். ரயில் கிளம்புவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் இதை புக் செய்ய வேண்டும்.
33
ரயில் விதிமுறைகள்
பெட் பாக்ஸ் புக் செய்ய, பயணிகளுக்கு கன்ஃபார்ம் டிக்கெட் இருக்க வேண்டும். RAC, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி கிடையாது. பயணத்திற்கு 48 மணி நேரத்திற்குள் வாங்கிய கால்நடை மருத்துவ சான்றிதழ் மற்றும் தடுப்பூசி போட்டதற்கான ரெக்கார்டு அவசியம். செல்லப் பிராணியின் எடைக்கு ஏற்ப, கிலோவுக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு PNR எண்ணுக்கு ஒரு செல்லப் பிராணி மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த சேவை எல்லா வழித்தடங்களிலும் உள்ளதா என பயணிகள் முன்கூட்டியே சரிபார்ப்பது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories