Passport: நீங்கள் அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால் 3 நாளில் உங்களுக்கு பாஸ்போர்ட் கையில் கிடைக்கும். தட்கல் பாஸ்போர்ட் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தட்கல் பாஸ்போர்ட் கட்டணமும் உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் வேலை, படிப்பு, மருத்துவ சிகிச்சை, பிசினஸ் அல்லது வேறு எந்த அவசரத் தேவைக்காகவும் பாஸ்போர்ட் தேவைப்பட்டால், இனி கவலைப்பட வேண்டாம். மத்திய அரசின் தட்கல் பாஸ்போர்ட் திட்டத்தின் கீழ், குடிமக்கள் மிகக் குறைந்த நேரத்தில் அதாவது 3 நாளில் பாஸ்போர்ட்டை பெற முடியும். ஆனால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள தேவையான ஆவணங்கள், செயல்முறை மற்றும் விதிகள் பற்றி சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
23
அவசரமாக வெளிநாடு போகிறவர்களுக்கு கைகொடுக்கும்
மிகக் குறைந்த நேரத்தில் பாஸ்போர்ட் தேவைப்படுபவர்களுக்காக 'மூணே நாள்ல பாஸ்போர்ட் ரெடி' சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை, படிப்பு, மருத்துவ சிகிச்சை, பிசினஸ் அல்லது அவசரப் பயணம் மேற்கொள்ளும் குடிமக்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மின்னல் வேக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பதாரர் தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியான தகவல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் சேவை மையத்தில் உங்கள் அப்ளிகேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, வெறும் 3 வேலை நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதனால், அவசர காலங்களில் இந்தத் திட்டம் மிகவும் கைகொடுக்கும்.
33
தட்கல் திட்டத்தின் பலன்கள் என்ன?
தட்கல் திட்டத்தில் அப்ளை செய்பவர்களுக்கு, சாதாரண முறையில் அப்ளை செய்பவர்களை விட அப்பாயிண்ட்மென்ட் சீக்கிரம் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு தனி முன்னுரிமை அளிக்கப்படுவதால், பணிகள் வேகமாக நடக்கும். பல சமயங்களில், முதலில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, அதன் பிறகுதான் போலீஸ் வெரிஃபிகேஷன் செய்யப்படும். இது விண்ணப்பதாரர்களின் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துகிறது.
இந்த விஷயங்களை மறக்காதீங்க
தட்கல் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்வதற்கு முன், தேவையான எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தவறான தகவல்கள், முழுமையற்ற ஆவணங்கள் அல்லது அப்ளிகேஷனில் உள்ள பிழைகள் காரணமாக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். எனவே, அப்ளிகேஷன் ஃபார்ம் நிரப்பும்போது அனைத்து விதிகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் பின்பற்றுவது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.