IRCTC ticket upgrade : ரயில் டிக்கெட் முன்பதிவில் பலருக்கும் தெரியாத ஒரு சூப்பரான அம்சம் பற்றி இந்த கட்டுரையில் சொல்லப் போகிறோம். ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் மூலம் ஏசி கோச்சில் பயணம் செய்யலாம். அது எப்படி என்று இப்போது பார்ப்போம்!
ரயில் பயணத்தில் ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசியில் பயணிக்க வேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? கூடுதல் பணம் செலுத்தாமல், ஸ்லீப்பர் வகுப்பு கட்டணத்திலேயே ஏசியில் பயணிக்கலாம். அது எப்படி? என்பது குறித்து இந்த பதவில் விரிவாகப் பார்க்கலாம்.
25
ஆட்டோ அப்கிரேடேஷன்
இந்த ஆப்ஷனை நீங்கள் பெற விரும்பினால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 'ஆட்டோ அப்கிரேடேஷன்' விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த கோச்சில் பெர்த் கிடைக்கவில்லை என்றால், அதைவிட உயர் வகுப்பில் இருக்கை கிடைக்கும். ஆனால், அந்த உயர் வகுப்பு பெட்டியில் இருக்கை காலியாக இருக்க வேண்டும். இதற்கு எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
35
எப்படி டிக்கெட் கிடைக்கும்?
ஸ்லீப்பர் வகுப்பில் இடம் இல்லையெனில், மூன்றாம் வகுப்பு ஏசியில் காலியாக உள்ள பெர்த் கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல், 3ஆம் வகுப்பு ஏசிக்கு 2ஆம் வகுப்பு ஏசியும், 2ஆம் வகுப்பு ஏசிக்கு முதல் வகுப்பு ஏசியும் கிடைக்கலாம்.
இந்த வசதி உயர் வகுப்பு கோச்களில் இருக்கைகள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். உயர் வகுப்பு கோச்களில் இடம் இல்லாதபோது இந்த ஆப்ஷனை உங்களால் பயன்படுத்த முடியாது. இந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்த பலர் ஸ்லீப்பர் டிக்கெட்டுகளில் மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணம் செய்துள்ளனர். இது ஐஆர்சிடிசி ஆன்லைன் முன்பதிவுக்கு மட்டுமே பொருந்தும்.
55
ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்
நீங்களும் இந்த ஆப்ஷனை ஒருமுறை முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும் ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி பெர்த் கிடைத்தால், குறைந்த செலவில் குளிர்ச்சியான ஏசி பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த வசதி பலருக்கும் தெரிவதில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.