உங்ககிட்ட பழைய ரூ.50 நோட்டு இருக்கா? அப்ப ரூ.25 லட்சம் உங்களுக்கு தான்!

First Published | Nov 12, 2024, 11:29 AM IST

நீங்கள் பழைய 50 ரூபாய் நோட்டு மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். தற்போது பழைய ரூபாய் நோட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அதிக விலை கொடுத்து அதை வாங்க தயாராக இருக்கின்றனர்.

Old 50 Rupees Note

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. என்ன தான் வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். தொழிலதிபராக இருந்தால் மட்டுமே லட்சங்களில் சம்பாதிக்க முடியும். ஆனால் வீட்டில் இருந்து கொண்டே லட்சங்களில் சம்பாதிக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 

ஆம். உண்மை தான். உங்களிடம் பழைய 50 ரூபாய் நோட்டு இருந்தால், அதைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். பழைய ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களுக்கு தற்போது அதிக தேவை இருப்பதால் லட்சங்கள் கொடுத்தும் இந்த நோட்டுகளை வாங்க பலரும் முயற்சிக்கின்றனர்.

Old 50 Rupees Note

அந்த வகையில் நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பினால், இந்த 50 ரூபாய் நோட்டு உங்களுக்கு உதவும். எனினும் உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டில் 786 வரிசை எண் இருக்க வேண்டும். இந்த எண் இருக்கும் பட்சத்தில் பழைய ரூபாய் நோட்டு மூலம் லட்சங்களில் சம்பாதிக்கலாம். இந்த எண் சிலருக்கு மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை.

இந்த நோட்டுகளை எங்கே விற்கலாம்

உங்களிடம் இதுபோன்ற பழைய நோட்டுகள் இருந்தால், அதை விற்று நீங்கள் எளிதாக கோடீஸ்வரராகலாம், இந்த நோட்டுகளை விற்பனை செய்வது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நோட்டுகள் விற்கப்படும் இன்றைய காலகட்டத்தில் Coin Bazaar, Quikr, eBay, OLX, India Mart போன்ற பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளங்களி பதிவு செய்ய வேண்டும்

Tap to resize

Old 50 Rupees Note

பதிவை முடித்ததும், 50 ரூபாய் நோட்டுகளை இருபுறமும் நன்றாக புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ரூபாய் நோட்டுகள் பற்றிய சில தகவல்களைத் தருவது அவசியம். இதனுடன் உங்களைப் பற்றிய தகவல்களையும் கொடுக்க வேண்டும்.

Old 50 Rupees Note

அனைத்து தகவல்களையும் கொடுத்த பிறகு, உங்கள் விளம்பரத்தை இடுகையிடவும். உங்கள் ரூபாய் நோட்டை வாங்க விரும்பும் வாடிக்கையாளர் சில நாட்களில் உங்களைத் தொடர்புகொண்டு பேசலாம். இதன் மூலம் உங்கள் ரூபாய் நோட்டின் மூலம் நீங்கள் ரூ.5 முதல் ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம் பழைய ரூபாய் நோட்டுகளையோ அல்லது நாணயங்களையோ விற்கவோ வாங்கவோ ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை. எனவே பழைய ரூபாய் நோட்டுகளை விற்பதற்கு முன் கவனமாக இருப்பது அவசியம்.

Latest Videos

click me!