அவமானப்படுத்திய ஃபோர்டு தலைவர்; ஆனா ரத்தன் டாடா எப்படி பழிவாங்கினார் தெரியுமா?

First Published | Oct 10, 2024, 1:07 PM IST

தனது கனவுத் திட்டமான டாடா இண்டிகா காரை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடா, ஃபோர்டு தலைவரால் அவமானப்படுத்தப்பட்டார். ஆனால், பின்னர் வந்த நிதி நெருக்கடியில் ஃபோர்ட் நிறுவனத்தின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளை டாடா வாங்கி அந்த அவமானத்திற்கு பதிலடி கொடுத்தார்.

Ratan Tata

நம்மை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க நினைத்தால், அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற பிரபலமான சொற்றொடர் உள்ளது. இந்த மேற்கோள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ரத்தன் டாடாவுக்கு பொருந்தும்.  ஆம். தன்னை அவமானப்படுத்திய ஃபோர்டு தலைவரை ரத்தன் டாடா எப்படி பழிவாங்கினார் தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ரத்தன் டாடா, 1990 களில் தனது கனவுத் திட்டமான டாடா இண்டிகா காரை அறிமுகம் செய்தார். ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்பட்ட இந்த கார்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. மோசமான விற்பனை காரணமாக, கார் பிரிவை விற்க டாடா முடிவு செய்தது.

Ratan Tata Ford

1999 ஆம் ஆண்டில், டாடா தனது கார் பிரிவை ஃபோர்டு மோட்டார்ஸுக்கு விற்க விரும்பியது. ரத்தன் டாடா மற்றும் அவரது குழுவினர் அடங்கிய நிறுவனத்தின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் டெட்ராய்ட் சென்று ஃபோர்டு தலைவர் பில் ஃபோர்டுடன் ஒரு சந்திப்பை நடத்தினர். மூன்று மணி நேரம் நடந்த சந்திப்பில்,  ஃபோர்டு தலைவர் ரத்தன் டாடாவை அவமானப்படுத்தினார்.

இந்த சந்திப்பின் போது, ​​கார்களை தயாரிப்பது பற்றி எந்த அறிவும் இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடங்கியிருக்கக் கூடாது என்று டாடாவை ஃபோர்டு தலைவர் அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அந்த அணியில் இருந்த பிரவீன் காட்லே 2015ல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ரத்தன் டாடா காதல் ஏன் கைகூடவில்லை? இப்படி ஒரு காரணம் இருக்கா?

Tap to resize

Ratan Tata

இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த டாடா குழுமத்தின் மூத்த அதிகாரி, "உங்களுக்கு பயணிகள் கார்களைப் பற்றி எதுவும் தெரியாது, நீங்கள் ஏன் வியாபாரத்தை ஆரம்பித்தீர்கள்? உங்கள் கார் பிரிவை வாங்கி நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்" என்று எங்களிடம் சொன்னார்கள்." என்று கூறினார்.

கூட்டத்திற்குப் பிறகு, ரத்தன் டாடா, இண்டிகா கார் பிரிவை விற்க வேண்டாம் என்று முடிவு செய்தார். டாடா மோட்டார்ஸை மாற்றவும், இண்டிகா மாடலை மேம்படுத்தவும் கடுமையாக உழைத்தார்.. காரின் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தடு. இது டாடாவின் அதிக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறும்.

Ratan Tata

9 ஆண்டுகளுக்குப் பிறகு, டாடாவின் சரியான தருணம் கிடைத்தது.  2008 ஆம் ஆண்டு உலகளாவிய நிதியச் சரிவுக்குப் பிறகு ஃபோர்டு நிறுவனம் திவால்நிலையின் விளிம்பில் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியது. ரத்தன் டாடா, ஃபோர்டு நிறுவனத்தின் ஐகானிக் பிராண்டுகளான  ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய பிராண்டுகளை வாங்க முன்வந்தார். ஜூன் 2008 இல், டாடா மோட்டார்ஸ் ஃபோர்டிடமிருந்து 2.3 பில்லியனுக்கு இந்த பிராண்டுகளை வாங்கியது..

அப்போது  தங்கள் கார்களை வாங்கியதன் மூலம் மிகப்பெரிய உதவி செய்ததாக பில் ஃபோர்டு ரத்தன் டாடாவுக்கு நன்றி கூறினார். டாடா குழுமம் JLR ஐ வாங்கியது மட்டுமல்லாமல், அவர்கள் அதை மிகவும் வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்றாக மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சாந்தனு நாயுடு? ரத்தன் டாடாவுக்கு நெருக்கமாக கூடவே இருந்த இளைஞர்!

Latest Videos

click me!