யார் இந்த சாந்தனு நாயுடு? ரத்தன் டாடாவுக்கு நெருக்கமாக கூடவே இருந்த இளைஞர்!

First Published | Oct 10, 2024, 8:59 AM IST

ரத்தன் டாடாவின் உதவியாளரான இருந்த சாந்தனு நாயுடுவுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய உறவு, ஆச்சரியமானது. 80 வயதைக் கடந்த டாடாவுடன் 30 வயது இளைஞர் நெருக்கமானது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

Who is Shantanu Naidu?

ரத்தன் டாடா தனது புத்திசாலித்தனமான வணிகத் திறமைக்காகவும் தலைமைப் பண்புக்காகவும் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க அளவு சமூகப் பங்களிப்புகளும் செய்தவர். முதுமையில் தனது உதவியாளரான இருந்த சாந்தனு நாயுடுவுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய உறவு, ஆச்சரியமானது.

Shantanu Naidu close friend

டாடா அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் மிக முக்கியமான வணிகத் தலைவர்களில் ஒருவருமான ரத்தன் டாடா புதன்கிழமை இரவு மும்பையில் காலமானார். 86 வயதான அவர் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

Tap to resize

Shantanu Naidu Post about Ratan Tata

ரத்தன் டாடாவின் மறைவுச் செய்தியை அறிந்ததும் அவரது உதவியாளர் சாந்தனு நாயுடு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தி வைரலாகியுள்ளது. “அவரது நட்பின் பிரிவு என்னிடம் விட்டுச் சென்றிருக்கும் வெற்றிடத்தை, என் வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சி செய்வேன். அன்புக்குக் கொடுக்கவேண்டிய விலை துக்கம்தான். குட்பை, மை டியர் லைட்ஹவுஸ்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் ஒரு த்ரோபேக் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

80 வயதைக் கடந்த ரத்தன் டாடாவுடன் நெருங்கிப் பழகிய 30 வயது இளைஞரான சாந்தனு நாயுடு யார்? என்று தெரிந்துகொள்ளலாம்.

Shantanu Naidu Video

30 வயதான நாயுடு, ஒரு முறை ரத்தன் டாடாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வீடியோ வைரலானதை அடுத்து, முதல் முறையாக உலகின் கவனத்தைப் பெற்றார். சாந்தனு டாடாவின் மகனாக இல்லாதபோதும், டாடா அவரை நம்பிக்கைக்குரியவராகக் கருதி அரவணைத்தார். தனது மகனைப் போலவே நினைத்து சாந்தனு நாயுடுவுடன் பழகினார்.

Shantanu Naidu and Tata

நாயுடு மே 2022 இல் இருந்துதான் ரத்தன் டாடாவுடன் பணியாற்றத் தொடங்கினார். சீக்கிரமே டாடாவின் நெருங்கிய வட்டாரத்தில் மிகவும் மதிப்புக்குரிய நபராக மாறினார்.

Shantanu Naidu book

புனேயில் பிறந்து வளர்ந்த நாயுடு, சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும், கார்னெல் ஜான்சன் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். சாந்தனு நாயுடு ஒரு எழுத்தாளரும்கூட. அவர் எழுதிய I Came Upon a Lighthouse என்ற புத்தகம் அதிக கவனம் பெற்றது.

Shantanu Naidu Good Fellow

டாடா எல்க்சியில் ஆட்டோமொபைல் டிசைன் இன்ஜினியராக அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு சாலை விபத்துக்களில் இருந்து தெருநாய்களைப் பாதுகாக்க ஒரு புதுமையான திட்டத்தைத் தொடங்கினார். இரவு நேரங்களில் ஓட்டுநர்களுக்கு நாய்கள் குறுக்கே வந்தால், தெளிவாகத் தெரியும்படி ரிஃப்ளக்டிவ் காலர்களை வடிவமைத்தார்.

Shantanu Naidu Car

சாந்தனு நாயுடுவின் இந்த முயற்சி, நாய் பிரியரான டாடாவின் கவனத்தை ஈர்த்தது. தனது திட்டத்தைப் பற்றி டாடாவுக்கு விளக்கமாக ஒரு கடிதம் எழுதினார் சாந்தனு நாயுடு. அதன் பிறகுதான், ரத்தன் டாடாவும் சாந்தனு நாயுடுவும் ஒரு கூட்டத்தில் வைத்து சந்தித்தனர். அன்றிலிருந்து இருவருக்கும் உருவான நட்பு ஆண்டுகள் கடந்து தொடந்தது.

Shantanu Naidu Start-Up

டாடாவுடனான அவரது நட்புக்கு அப்பால், நாயுடுவும் ஒரு தொழிலதிபராக உயர்ந்துள்ளார். அவர் குட்ஃபெலோஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை நிறுவியுள்ளார். மூத்த குடிமக்களுக்கான சேவைகளை வழங்கும் இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5 கோடி. ரூபாய்.

Shantanu Naidu company

தன் இளம் நண்பரான சாந்தனு நாயுடுவின் முன்முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தார் டாடா. அதன் அடையாளமாக நாயுடுவின் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் டாடாவும் முதலீடு செய்தார். இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் சமூக சேவைக்கு முன்னுதாரணமாக இருந்த ரத்தன் டாடாவின் மறைவு ஒரு அற்புதமான நட்பின் பிரிவாகவும் அமைந்துவிட்டது.

Latest Videos

click me!