காப்பீட்டு பிரீமியம் மீதான வரி விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன. காப்பீட்டு செலவுகள் மற்றும் கமிஷன் வரம்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக பிரீமியம் கொண்ட பாலிசிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே அதிக பிரீமியம் செலுத்தும் பாலிசி எடுத்திருப்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.
ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பிரீமியம் தொகைகளுக்கு வரி செலுத்த வேண்டும். இதுதவிர யுலிப் எனப்படும் யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான் பாலிசிதாரர்களுக்கு வருமான வரி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான ஐஆர்டிஏஐ, நிர்வாகச் செலவுகள் மற்றும் கமிஷன் வரம்பை மாற்றியுள்ளது. காப்பீட்டு முகவர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளர்களுக்கான கமிஷன் வரம்பை நீக்கவும் முடிவு செய்துள்ளது.
கமிஷன் தொகையை நிர்ணயத்தை காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி செய்துகொள்ளலாம். பாலிசி எடுப்பவர்கள் காப்பீட்டுத் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.