கடந்த சில நாட்களாக உயர்வை சந்தித்த வந்த தங்கம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நகை வாங்குவோரிடையே கவலையை உண்டாக்கியது.
25
நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 35 உயர்ந்து 5,590க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு 200 உயர்ந்து 44,720க்கு விற்பனை செய்யப்பட்டது.
35
அதேபோல நேற்று வெள்ளி கிராமுக்கு 1.30 உயர்ந்து 77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி 77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறியும், இறங்கியும் வருகிறது.
இன்றைய (ஏப்ரல் 01) நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 5,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து 44,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
55
வெள்ளி விலையை பொறுத்தவரை 20 காசுகள் உயர்ந்து 77.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 77,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.