GPay-யில் Wrong Numberக்கு பணம் அனுப்பினால் என்ன செய்வது?

Published : Sep 05, 2025, 05:22 PM IST

கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யும்போது ஏற்படும் தவறுகளைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

PREV
15
Google Pay தவறான பரிவர்த்தனை

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் இன்று மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் எளிதாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும். ஆனால், சிறு பிழைகள் கூட பண இழப்பை ஏற்படுத்தும். தவறான தொடர்பு எண்ணைத் தேர்வு செய்தாலோ அல்லது எழுத்துப் பிழை ஏற்பட்டாலோ பணம் வேறு ஒருவருக்குச் சென்றுவிடும்.

25
கூகுள் பே

இதுபோன்ற தவறுகள் நடந்தால் என்ன செய்வது? முதலில், தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. பணம் தவறாக அனுப்பப்பட்டால், உடனடியாக அந்த நபரைத் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெற வேண்டும். நமது தொடர்பு பட்டியலில் உள்ளவர்களாக இருந்தால், பணத்தை எளிதில் திரும்பப் பெறலாம். அவர்களை அழைத்துப் பேசுவதன் மூலமோ அல்லது செய்தி அனுப்புவதன் மூலமோ பணத்தைத் திரும்பப் பெறலாம்.

35
பணம் மாற்றி அனுப்புதல்

அறிமுகமில்லாத ஒருவருக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தால், அவர்களை அழைத்து மரியாதையுடன் தவறை விளக்கி பணத்தைத் திரும்பக் கேட்கலாம். மரியாதையான அணுகுமுறை பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த முறை பலனளிக்கவில்லை என்றால், கூகுள் பே வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளலாம். 18004190157 என்ற எண்ணில் அவர்களை அணுகலாம்.

45
யுபிஐ ஐடி

புகார் அளிப்பதற்கு முன், பரிவர்த்தனை ஐடி, தேதி, நேரம், தொகை மற்றும் பெறுநரின் UPI ஐடி போன்ற விவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த விவரங்களை கூகுள் பே வாடிக்கையாளர் சேவைக்கு வழங்க வேண்டும்.

55
என்பிசிஐ புகார்

இந்திய தேசிய பணப்பரிமாற்றக் கழகத்திடம் (NPCI) புகார் அளிப்பதும் மற்றொரு வழி. npci.org.in என்ற இணையதளத்தில் 'What We Do' என்பதைக் கிளிக் செய்து UPI-ஐத் தேர்ந்தெடுக்கவும். பரிவர்த்தனை ஐடி, வங்கி விவரங்கள் மற்றும் தொகை போன்ற விவரங்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories