தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,06,240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,07,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி அனைத்து தரப்பு மக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் 2026ம் தொடங்கியதை அடுத்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
25
அதாவது தங்கம் விலையுடன் போட்டா போட்டிக்கொண்டு வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது ஒரு கிலோ வெள்ளி விலை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி உயர்ந்து வந்த நிலையில் இன்றைய நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.
35
நேற்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,170க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 14) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.14,487ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 115,896ஆக விற்பனையாகிறது.
55
அதேபோல் வெள்ளி விலை இன்று கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.307க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.307,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வெள்ளி நகை வாங்குவோர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.