தற்போதைய டிஜிட்டல் காலத்தில் நிமிடங்களில் கணக்கு திறக்கும் வசதி இருந்தாலும், அதையே பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மோசடிகளை அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்பிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனி ஆதார் OTP மட்டும் வைத்து வங்கி கணக்கு திறப்பது/முழுமையாக செயல்படுத்துவது கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போதைய டிஜிட்டல் காலத்தில் நிமிடங்களில் கணக்கு திறக்கும் வசதி இருந்தாலும், அதையே பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மோசடிகள் அதிகரித்ததால், வங்கிகள் இப்போது KYC விதிமுறைகளை மேலும் கடுமையாக்க தொடங்கியுள்ளன.
25
இதுவரை ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ பதிவு செய்தாலே e-KYC முடிந்து கணக்கு திறக்கப்பட்டது. ஆனால் இந்த முறையில், ஆதார் விவரங்களைப் பயன்படுத்துபவர் உண்மையான நபர்தானா என்பதை வங்கி அதிகாரிகள் உறுதி செய்ய முடியாது. இதைப் பயன்படுத்தி மற்றவர்களின் பெயரில் ‘ம்யூல் அக்கவுண்ட்’ உருவாக்கி, கோடிக்கணக்கில் பண மோசடிகள் நடைபெறுகின்றன.
35
இந்த சிக்கலை தடுக்கும் வகையில், பல வங்கிகள் Video KYC-ஐ முன்னிலைப்படுத்துகின்றன. இதில் ஆவணங்களை அப்லோடு செய்வது மட்டும் போதாது. வங்கி பிரதிநிதியுடன் வீடியோ கால் மூலம் நேரடியாக பேச வேண்டும். அப்போது ஆதார், PAN போன்ற அசல் கார்டுகளை கேமரா முன் காட்ட வேண்டும்.
மேலும் வீடியோ KYC சமயத்தில் வாடிக்கையாளரின் லைவ் லொக்கேஷன் பதிவு செய்யப்படுவதால், போலி படம்/வீடியோ பயன்படுத்தி ஏமாற்றுவது கடினமாக உள்ளது. கிராமப்புறம் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் சிரமம் உள்ளவர்களுக்கு உதவி வீடியோ KYC வசதியும் வழங்கப்படுகிறது. குடும்பத்தினர் உதவியுடன் KYC முடிக்கலாம்.
55
முக்கியமாக, “KYC கலாவதி… இந்த லிங்கை கிளிக் செய்யவும்” என வரும் மெசேஜ்களுக்கு உடனே நம்பாதீர்கள். வங்கிகள் பொதுவாக சீரற்ற இணைப்புகளை அனுப்பாது. வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப் அல்லது இணையதளம் மூலம் மட்டுமே KYC செயல்முறையை முடித்து, உங்கள் பணத்தை சைபர் திருடர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.