நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 2வது நாளாக சரசரவென குறைந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கத்தில் அதிக முதலீடு
தங்கம் என்ற வார்த்தையை கேட்டாலே பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் தங்கத்தின் மீதான ஆர்வம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்க நகைகளை அணிய இந்திய பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள். அதுவும் குறிப்பாக தமிழக பெண்கள். ஏதாவது ஒரு விஷசே நிழ்ச்சிக்கு சென்றால் மற்றவர்கள் கழுத்தில் எந்த மாதிரியான நகைகளை அணிந்துள்ளனர் என்பதை பார்க்கும் பழக்கம் தமிழக பெண்களிடம் உண்டு.
கிடுகிடுவென உயர்ந்த தங்கம்
மேலும் அவசர பண தேவைகளுக்கு தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் தான் தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தங்கம் ரூ.10,000 முதல் 15,000 வரை உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக குறைந்த தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கு விற்பனையானது.
இதையும் படிங்க: தங்கம் விலையை ஏற்றிவிட்ட டிரம்ப்! தங்க ETF களில் குவியும் முதலீடு!
இன்றைய தங்கம் விலை
இன்றைய (ஏப்ரல் 05) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் விலை
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,065-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.72,520-ஆக விற்பனையாகிறது.